Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மதுமிதா

11 செப், 2019 - 08:52 IST
எழுத்தின் அளவு:
Madhumita-creates-hype

'பிக்பாஸ்' வீட்டை விட்டு விதிகளை மீறியதாக வெளியேற்றப்பட்ட பிறகு அடுத்து பரபரப்பான பல தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மதுமிதா.

பொதுவாக அந்த நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேறுபவர்களின் பேட்டிகளை விஜய் டிவியே ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், மதுமிதாவிற்கு மட்டும் அப்படி ஏற்பாடு செய்யவில்லை.

தான் வெளியேற்றப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களை தானாகவே சந்தித்து முதலில் பேசினார். அடுத்து விஜய் டிவி மீதும், 8 போட்டியாளர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை விஜய் டிவி அலுவலகத்திலேயே மதுமிதா பத்திரிகையாளர் சந்திப்பு விஜய் டிவியே ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்டு பேசிய மதுமிதா, பிக்பாஸ் குழுவினர் மீதும், கமல்ஹாசன் மீதும் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

காவிரி பிரச்சினைக்காக கவிதை சொன்னதை அரசியல் என்று சொல்லியதால் எனக்கு மற்ற போட்டியாளர்களிடம் இருந்து 'ஹராஸ்மென்ட்' நடந்தது என்று அன்று மீண்டும் தெரிவித்தார். மேலும், மற்ற பெண் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் பற்றி சில ஆண் போட்டியாளர்கள் எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பது பற்றியெல்லாம் பேசினார்.

பிக்பாஸ், கமல்ஹாசன், காவிரி பிரச்சினை, கொடுமை, கேங் ராகிங் என பரபரப்புக்குத் தேவையான பல விஷயங்களை அன்று அவர் பேசியதால் தொடர்ந்து அது பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பலமாக வெடித்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கத்தான் இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையே திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் அடுத்த பட இயக்குநர் பேரரசு?விஜய்யின் அடுத்த பட இயக்குநர் ... டிஜிட்டல் உரிமையில் அசத்திய 'சை ரா' டிஜிட்டல் உரிமையில் அசத்திய 'சை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in