Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்

10 செப், 2019 - 17:36 IST
எழுத்தின் அளவு:
Rithvika-to-act-in-Vijaysethupathi-film

சென்னை: விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிகை ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் நடிகை ரித்விகா. கபாலி, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட ரித்விகா, மக்களின் அமோக ஆதரவுடன் அந்த சீசனின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சமூக ஆர்வலராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் ரகுநந்தன் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரித்விகா. விஜய் சேதுபதியுடன் அவர் வரும் காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப்பட உள்ளன. இந்த படத்தில் ரித்விகாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயனின் பக்கா லைன்-அப்சிவகார்த்திகேயனின் பக்கா லைன்-அப் தனுஷின் புதுப் படம் ‛ராயன் தனுஷின் புதுப் படம் ‛ராயன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in