இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வியாபார ரீதியாகவும், பெயர் பெறும் அளவிலும் உச்சத்தைத் தொட்டவர் சிவகார்த்திகேயன். அவருடைய வளர்ச்சியைக் கண்டு மற்ற ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு முக்கியமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என அவருடைய அடுத்த படங்களை லைன்அப் செய்து வைக்கிறார்.
அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் வெளிவர உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‛இரும்புத் திரை' மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படம் வெளிவர இருக்கிறது. அதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையில் அடுத்த மாதம் முதல் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படங்கள் மீது அதிக நம்பிக்கையில் சிவகார்த்திகேயனும் உள்ளார், திரையுலகத்திலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.