32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
இந்தியத் திரைப்படத் துறையில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்தான் ஒவ்வொரு வருடமும் அதிகமான படங்கள் வருகின்றன. இவற்றில் உலக அளவில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்கள் திரையிடப்படுகின்றன.
அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தியப் படங்கள் அங்குள்ள இந்திய மக்களால் அதிகம் ரசிக்கப்படுகின்றன. சீனா திரையுலகம் என்பது மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மிக மிகக் குறைவு.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக சீனாவில் இந்தியப் படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டும், சப்டைட்டிலுடனும் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஆமீர்கான் நடித்த 'தங்கல்' படம் 1200 கோடி வசூலித்து பெரும் சாதனை புரிந்தது. அதைத் தொடர்ந்து பல இந்தியப் படங்கள் அங்கு வெளியாகி வருகின்றன.
இந்திய அளவில் பெரிய இயக்குனர்கள், பெரிய பிரம்மாண்டப் படங்கள், ஹாலிவுட்டுக்கே சவால் என பேசப்பட்ட ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி', ஷங்கர் இயக்கிய '2.0' ஆகிய படங்கள் சீனாவில் ரசிகர்களால் வரவேற்பைப் பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளன.
அதே சமயம் ''தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், அந்தாதுன், பஜ்ரங்கி பைஜான், ஹிந்தி மீடியம், ஹிச்கி, பிகே. மாம்” ஆகிய கதைகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்கள் சீனாவில் 100 கோடி முதல் 1200 கோடி வரை வசூலித்துள்ளன.
சீன திரைப்பட ரசிகர்கள் பிரம்மாண்டத்தை அதிகம் விரும்பாமல் கதைகளை உள்ளடக்கிய படங்களை மட்டுமே ரசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் புரிகிறது.
இந்தியாவில் வசூலித்ததைப் போல சீனாவிலும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி 1 (7 கோடி), 2 (75 கோடி)' மற்றும் '2.0' (3 நாட்களில் 20 கோடி) ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மிகக் குறைவான வசூலைப் பெற்றுள்ளது திரையுலக வட்டாரங்களில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தென்னிந்தியப் படங்களுக்கான மார்க்கெட் புதிதாக உருவானது என்று மகிழ்ச்சியடைந்தவர்களுக்கு இந்த தோல்வி 'ரிசல்ட்' அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இனி, சீனாவில் நல்ல கதைகளைக் கொண்ட தென்னிந்தியப் படங்களை வெளியிட்டால் மட்டுமே வரவேற்பைப் பெற முடியும். அப்படி எந்த ஒரு படம் அங்கு வெளியாகி வரவேற்பைப் பெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.