எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளி வருகின்றன. ஒரே சமயத்தில் அப்படியான போட்டிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே சொல்லி வருகிறார்கள். அப்படியிருந்தும் வாராவாரம் படங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த வாரத்தில் பெரிய படங்கள் எதுவுமே வரவில்லை. வரும் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள் தான். வரும் செப்டம்பர் 13ம் தேதி 'கன்னி ராசி, என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி,' ஆகிய படங்கள் வெளிவருகின்றன.
இவற்றில், 'கன்னிராசி' படம் மட்டும்தான் கொஞ்சம் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ள படம். 'கன்னி ராசி' படத்தில் விமல், வரலட்சுமி நடித்துள்ளார்கள். 'ஒங்கள போடணும் சார்' படத்தில் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 'என் காதலி சீன் போடுறா' படத்தில் அங்காடித் தெரு மகேஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்த வார வெளியீடுகளில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது.