175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு இந்தியாவில் வெளிவந்த '2.0' படம் ஹிந்தியில் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை.
சீனாவில் இப்படம் வெளியாகும் போது பெரிய வசூலைக் குவித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த வாரம் அங்கு வெளியான படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
வெளியான மூன்று நாட்களில் வெறும் 20 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதற்கு மேலும் படம் பிக்கப் ஆகி விடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஒரு தமிழ்ப் படம், ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் வெளியானது என்பது மட்டுமே இந்தப் படத்திற்கான பெருமையாகச் சேர்ந்துள்ளது.
ஆமீர்கான் நடித்த 'தங்கல்' சீனாவில் 1200 கோடி வரை வசூலித்தது. ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் கூட அங்கு 100 கோடி வசூலைக் கடந்தது. அடுத்த சில நாட்களில் 2.0 படம் ஓடினாலும் 50 கோடியைக் கடக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.