இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கத்தில் உருவான படம் ‛வர்மா'. இந்தப்படம் உருவாக்கப்பட்ட விதம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று சொல்லி ஒட்டுமொத்த படத்தையும் தயாரிப்பாளர் தூக்கி போட்டார். பாலாவுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. இருப்பினும் துருவ்வின் சினிமாவை கருத்தில் கொண்டு பாலா மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என கூறிவிட்டார்.
இருந்த போதும், புதுமுக இயக்குநர் ஒருவரை வைத்து ‛ஆதித்ய வர்மா' என்ற பெயரில் படத்தை மீண்டும் தயாரித்து விட்டனர் படத் தயாரிப்புக் குழுவினர். அந்தப் படத்திலும் கதாநாயகன் துருவ் விக்ரம் தான்.
இந்த அவமானத்தால் நொந்து போயிருக்கும் இயக்குநர் பாலா, தன்னுடைய முழுத் திறமையையும் காட்டி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் பாலா. இதற்காக, மிகச் சிறப்பான ஒரு கதையை அவர் எழுதியிருக்கிறார்.
இந்த கதையை நடிகர் சூர்யாவிடம் அவர் சொல்ல, அசந்து போன சூர்யா, அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, திரைக்கதை அமைக்கும் பணியை பாலா துவங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
காப்பான் ரிலீஸாக உள்ள நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடிக்கும் சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின் பாலாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே நந்தா, பிதாமகன் படங்களில் பாலாவும், சூர்யாவும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.
இதற்கிடையில், பாலா - சூர்யா ஜோடி இணைந்து உருவாக்க இருக்கும் புதிய படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுதவிருக்கிறார். அதேப்போல, அந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்கக் கேட்டுள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனம் படம் ஒன்றிலும் நடிக்க சூர்யாவுடன் பேசி வருகின்றனர்.