Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தண்ணீர் பிரச்சினை அரசியலா? - மதுமிதா கேள்வி

09 செப், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Madhumita-opened,-what-happend-in-Biggboss-house?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, விதிகளை மீறியதாக அந்நிகழ்ச்சியை விட்டு நிகழ்ச்சி அமைப்பினரால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. அவர் வீட்டுக்குள் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என்றெல்லாம் பரபரப்பான புகார்கள் வெளிவந்தன. பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில விளக்கம் கொடுத்தார். ஆனால், பிரச்சினை நடந்த அன்று வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி அவர் அன்று சொல்லவில்லை..

இன்று(செப்.,9) விஜய் டிவி ஏற்பாட்டின்படி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“பிரச்சினை நடந்த அன்று ஒவ்வொருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்களது தனித் திறமையை வெளிப்படுத்த சொன்னார்கள். சுதந்திர தினத்தன்று அது நடந்தது. அன்று ஒரே வரி கவிதை சொன்னேன். நம் ஊரில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டுவேன்.

அந்த டாஸ்க்கில் வருண பகவானும் கர்நாடகாவைச் சேர்ந்தவரோ, மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறாரோ என்று கவிதை சொன்னேன். நான் அப்படி கவிதை சொன்னதற்கு சேரன், கஸ்தூரி ஆகியோரைத் தவிர மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நமக்கு தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக நான் தினமும் கடவுளிடம் வேண்டுவேன். ஸ்லோகம் சொல்வேன். மழை வர வேண்டும் என்று வேண்டுவேன். அதைத்தான் கவிதை வடிவில் சொன்னேன்.

அது பற்றி பிக்பாஸ் பின்னர் ஒரு கடிதம் அனுப்பினார். வீட்டுக்குள் அரசியல் பேசக் கூடாது என்றார். நான் மழை வேண்டி கவிதை சொன்னதில் எங்கே அரசியல் இருக்கிறது. அப்படி ஒரு கடிதம் வந்ததும் சேரன், கஸ்தூரி தவிர மற்றவர்களின் கொடுமை இன்னும் அதிகமானது. என்னை அவ்வளவு கிண்டலாக, கேலியாக பேசினார்கள். ஒரு கேங் ராங்கிங் போல அது இருந்தது. அது தாங்க முடியாததால்தான் கையை அறுத்துக் கொண்டேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் கூட நான் தண்ணீர் பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த 8 பேரையும் மக்கள் வெற்றி பெற வைக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கமல்ஹாசன் அவர்களும் அது குறித்து எதுவுமே கேட்காதது வருத்தமாக இருந்தது. அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதைப் பற்றி அவர் பேசியிருக்க வேண்டும்,” என்றார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சங்க நிர்வாகிகளுடன் மோதல்: சண்டை இயக்குனர் தற்கொலை முயற்சிசங்க நிர்வாகிகளுடன் மோதல்: சண்டை ... தயாரிப்பாளரை ஏமாற்றியவர் பிரகாஷ்ராஜ்: ஜாக்குவார் தங்கம் தயாரிப்பாளரை ஏமாற்றியவர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

sankar - ghala,ஓமன்
10 செப், 2019 - 11:31 Report Abuse
sankar ஜல்லி கட்டு, methane, காவேரி இது போன்ற தலைப்பிலே பேசினால் போதும் தமிழன் கண் மூடி தனமா வோட்டு போட்டுருவான் நினைப்பு.. பிக் பாஸ் வீட்டில் காவேரி பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன… இது எல்லாம் ஜஸ்ட் ஒரு அட்டென்ஷன் சிக்கிங் ஸ்டண்ட்
Rate this:
Krish - Chennai ,இந்தியா
10 செப், 2019 - 09:59 Report Abuse
Krish நல்லவர்களாக நடிக்க கூட முடியவில்லை. எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் அந்த வீடு.
Rate this:
sri - trichy,இந்தியா
10 செப், 2019 - 09:54 Report Abuse
sri தேவையில்லாத பிரச்சனை .
Rate this:
Daya - Wellington,நியூ சிலாந்து
10 செப், 2019 - 09:28 Report Abuse
Daya இதுவரை இல்லாது, Big boss நிகழ்ச்சியில் பேசுவது உங்கள் தனிப்பட்ட நன்மைகளை கருதியே. அதுவும் ஒட்டு மொத்த தண்ணீர் பிரச்சனைக்கு கர்னாடக மக்களை இழுக்கும் காரணம் என்ன. தமிழ்னாட்டு மக்கள் முதலில் மழை காலத்தில் நீரை சேகரித்து வைப்பதற்கு குழங்களை அனைகளை சீர்படுத்த, நீர் வீண் விரயத்தை கட்டுப்படுத்த, கழிவு நீர் மீல் சுழர்ச்சி என எதிலும் அதிக சிரத்தை எடுத்து நடவடிக்கை எடுக்கவும் இல்லை அதற்காக அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை. பிற மானிலத்தாரை எதற்கு வம்புக்கு இழுக்க வேண்டும். பிறர் உள்ளாடை/வெளியாடை பேசும் நீங்கள் சமூகத்தினால் வெறுக்கபடும் பல கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து உள்ளீர்கள். படத்தில் நடிப்பது தப்பு இல்லை என்றால் இந்த விளையாட்டிலும் அவர் விருப்பு போல இருப்பது தப்பாக படவில்லை. எல்லாம் பேசிய நீங்கள் மீண்டும் அதே வீட்டுக்குள் நுளைய ஆசைபடுவது பணத்தை மையப்படுத்தி மட்டுமே. நீங்கள் செய்தது தண்டனைக்கு உரிய தற்கொலை முயர்ச்சி. உங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளும் நேரம் இது... பிறரை அல்ல‌
Rate this:
oce - tokyo,ஜப்பான்
10 செப், 2019 - 08:27 Report Abuse
oce பிரச்சினைகளை நல்ல தமிழில் மக்களை கவரும்படியும் எளிதில் புரியும் படியும் பேசத்தெரியாதவர் கமல். ஆந்திராவிலிருந்து பீப்பி ஊத வந்தவரெல்லாம் முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்பட்டபோது பரமக்குடியில் பிறந்தவருக்கு தமிழ் சரியாக வராதது ஏனோ.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in