175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் நேற்று சீனாவில் 48 ஆயிரம் திரைகளில் வெளியானது. இந்தப் படம் சீனாவில் வசூல் குவிக்கும் என்று எதிபார்க்ப்பட்டுள்ளது. சீனாவில் தமிழ் மொழியில் சீன சப்-டைட்டிலுடன்தான் இப்படம் வெளியாகி உள்ளது.
நேற்று வெளியான முதல் நாள் வசூலாக 1.23 மில்லியன் யுஎஸ் டாலர்களை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 8.8 கோடி. சீனாவில் வெளியான இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
படத்தைப் பார்த்த பின் ரசிகர்கள் சொல்லும் வாய் வழித் தகவலை வைத்தே இந்தப் படத்தின் அடுத்த கட்ட வசூல் இருக்கும். சீன ரசிகர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் நிச்சயம் வசூலைக் குவிக்கும். அது அடுத்த சில நாட்களில்தான் தெரிய வரும்.