இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காப்பான்'. இந்த மாதம் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு வியாபாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை பிரபல வினியோகஸ்தர் மதுரை அன்பு வாங்குவதாக சொல்லப்படுகிறது.
மேலும், மோகன்லால் படத்தில் இருப்பதால் மலையாள வியாபாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தவிர ஆந்திரா, தெலங்கானாவிலும் இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் இதற்கு முந்தைய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் 'காப்பான்' படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெற்றி யாருக்கு முக்கியமோ இல்லையோ, சூர்யாவுக்கு முக்கியமானது.