என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். காமெடி நடிகராக சினிமாவில் கால்பதித்து இப்போது குணசித்ர நடிகராக வலம் வருகிறார். "எம்.எஸ்.பாஸ்கருக்கு தேசிய விருது வழங்கப்படாதது வருத்தமாக இருக்கிறது" என்று கமல்ஹாசனே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது அவர் நடித்து வரும் ஒரு படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று நம்புகிறார்கள். வேணு நாயர் இயக்கும் அந்த படத்தின் பெயர் ஜலசமாதி. மலைகிராமம் ஒன்றில் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அதில்தான் அந்த பகுதி கிராம மக்கள் வேலை செய்கிறார்கள். 60 வயதில் அங்கு வேலை செய்கிறவர்களுக்கு ரிட்டைர்மெண்ட் கொடுத்து விடுவார்கள். 60 வயதுக்கு முன்பே அந்த தொழிலாளி இறந்து விட்டால் வாரிசு அடிப்படையில் அந்த வேலை அவரது மகனுக்கு கிடைக்கும்.
மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த தொழிலாளி தானே இறந்து விடுவார். அப்படி இல்லாவிட்டால் இயற்கை மரணம் போன்று அவர் சொந்த குடும்பத்தினராலேயே கொல்லப்படுவார். அப்படி மகனின் வேலைக்காக சாகத் தயாராகிற முதியவராக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். குடும்பமே சேர்ந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கொல்கிறார்கள் என்பதைத்தான் படம் சொல்கிறது. சமூகத்தின் மனசாட்சியை உலுக்கப்போகும் இந்தப் படம் மலையாளத்தில் தயாரானாலும் தமிழிலும் வெளியிட உள்ளனர்.
இதுபோன்று வயதானவர்களை கொல்லுவதற்கு தலைக்கூத்தல் என்ற பெயர் உண்டு. இதை மையமாக வைத்தே இப்படம் தயாராகிறது. எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள்.