பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் |
'குக்கூ, ஜோக்கர்' படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. புதுமுகம் நடாஷா சிங் ஹீரோயின். லால்ஜோஸ், சன்னி லாயன், சுசீலா ராமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் கம்யூனிச சித்தாந்தங்களை கொண்ட ஒரு நாடோடி பாடகனின் பயணம் பற்றியது. இந்தியா முழுவதும் பயணிக்கிற கதை. இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. படத்தின் தணிக்கையில் சிக்கல் என்று செய்திகள் வந்துள்ளன.
படத்தில் இந்துக்களையும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கிறதாம். இதனால் சென்சார் போர்டு படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. அதன்பின் ரிவைசிங் கமிட்டிக்கும் சென்றிருக்கிறார்கள். அங்கும் சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள். எனவே இப்போது தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ளார்களாம். அங்கு படத்திற்கு தணிக்கை தந்தால்தான் படம் வெளியாகும். இல்லையெனில் நீதிமன்றத்தைத்தான் படக்குழுவினர் அணுக வேண்டும்.
இப்படத்தைத் தயாரித்துள்ள அம்பேத்குமார், வந்தவாசி தொகுதியின் திமுக எம்எல்ஏ என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இவர் இதற்கு முன் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த 'மனம் கொத்திப் பறவை' படத்தை இணைந்து தயாரித்தவர்.