என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
தனுஷ், நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‛எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக இன்று வெளிவருவதாக உறுதியாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் கடைசி நேரத்தில் வெளிவரவில்லை.
இந்த படத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி இருந்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் வெளிவருகிறது. எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவராதது ஏன் என்பது குறித்து படத்தை தயாரித்துள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 6 அன்று (இன்று) வெளியாக இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்த சில தினங்களில் வெளியிட இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். இதில் ஏற்படும் தாமத்தினால் உங்களுக்கு (ரசிகர்கள்) ஏற்படும் ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றையும், அதன் காரணமாக வெளிப்படும் உங்கள் கருத்தையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கருத்தில் கொண்டு எங்கள் பயணம் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலக்கை எட்டிப்பிடிக்க உங்களிடம் வேண்டுவது அன்பையும், ஆதரவையும் மட்டுமே. பொறுமை காத்து எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும். படம் உங்கள் காத்திருப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் கண்டிப்பாக நியாயம் செய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.