விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில், 2016ல் துவங்கப்பட்ட படம், எனை நோக்கி பாயும் தோட்டா. சம்பள பிரச்னை, கடன் என, பல காரணங்களால், வெளியீடு தள்ளி போனது. இந்நிலையில், நாளை(செப்.,6) படம் வெளியாகும் என, கவுதம் மேனன் அறிவித்தார்.
ஆனால், அவருக்கு கடன் கொடுத்தவர்களில் சிலர், நீதிமன்றத்தை நாடி உள்ளனர். மேலும் தனுஷிற்கு பேசிய சம்பளத் தொகையும் செட்டில் செய்யப்படவில்லை. இதன் காரணமாக படம் நாளை வெளியாகவில்லை.
இதற்கு பதில் ஏற்கனவே ரிலீஸிற்கு தயாராக இருந்த சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடித்துள்ள ‛சிவப்பு மஞ்சள் பச்சை' படம் நாளை ரிலீஸாகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் நடக்கின்றன.
‛பிச்சைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சசி இயக்கி உள்ள படம் இதுவாகும். ஜிவி பைக் ரேஸராகவும், சித்தார்த் போக்குவரத்து காவலவராகவும் நடித்துள்ளனர். படத்தின் ஆக்ஷன், காதல், எமோஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கலந்துள்ளன.