வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
ரஜினியின் இளையமகள் செளந்தர்யா- அவரது கணவர் விசாகன் ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் சென்றனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து அவர்கள் பயணம் செய்தனர்.
அப்போது லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் பாஸ்போர்ட் காண்பிக்க அதை வைத்திருந்த சூட்கேஸை தேடியபோது காணாமல் போயிருந்தது. அந்த சூட்கேஸிற்குள் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் விலையுர்ந்த பொருட்கள் இருந்தன.
இதையடுத்து லண்டன் விமான நிலைய காவல் துறையிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைத்த போலீசார், சூட்கேஸை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அவர்கள் விமான நிலையத்தில் தங்க வைத்திருக்கும் தகவலை இந்திய தூதரகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாகனுக்கு தற்காலிக பாஸ்போர்ட் அளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து பாஸ்போர்ட் அடங்கிய சூட்கேஸை திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.