'காசேதான் கடவுளடா' வெளியீடு தள்ளி வைப்பு | மீண்டும் கைகோர்க்கும் லவ் ஆக்சன் டிராமா கூட்டணி | 5 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தாண்டு வெளியாகும் ‛ஆடுஜீவிதம்' | பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு மாநாடு என்ற படத்தில் நடிக்கவிருந்தார். இந்த படத்தில், நடிகர் சிம்பு, ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராததோடு, எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பு இல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
இதையடுத்து, வெங்கட் பிரபு இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஹாட் ஸ்டார் தளத்துக்காக, வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் வைபவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் உறுதியாகாமல் இருந்தது. அதை தற்போது, இணையத் தொடரில் நடிக்கும் நடிகர் வைபவ் உறுதிப்படுத்தியுள்ளார்.