Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

03 செப், 2019 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Prabhas-is-next-south-indian-super-star

தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா, அஜித்தா என அவருடைய ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, இரண்டு படங்களில் தான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என முன்னேறிவிட்டார் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.

அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'சாஹோ' படம் உலக அளவில் 300 கோடி வசூலைக் கடந்து, ஹிந்தியில் மட்டுமே 100 கோடியைக் கடந்துள்ளது. அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'பாகுபலி 1, பாகுபலி 2, சாஹோ' ஆகிய படங்கள் 300 கோடி வசூலைக் கடந்த படங்கள்.

இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன், கபாலி, 2.0' ஆகிய படங்கள்தான் அதிக வசூலைப் பெற்ற படங்கள். அவற்றில் எந்திரன், கபாலி 280 கோடி வரை வசூலித்தவை. 2.0 படம் 600 கோடி வசூலித்த படம்.

ரஜினிகாந்த்தை விடவும் அதிக வசூலைக் குவித்த ஹீரோக்களில் முன்னணியில் சென்று கொண்டிருப்பவர் பிரபாஸ் மட்டுமே. அதனால், அவர்தான் அடுத்த தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என டோலிவுட்டிலும், தெலுங்கு மீடியாக்களிலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்கா தந்த அதிர்ச்சிஅனுஷ்கா தந்த அதிர்ச்சி ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை திறப்பு ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை திறப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
05 செப், 2019 - 20:10 Report Abuse
Murugan இரண்டு படம் ஓடங்ககாட்டியும் சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் ஓவராகஇல்லையா?
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
04 செப், 2019 - 13:09 Report Abuse
K.P  SARATHI தான் சம்பாரித்த பணத்தில் குறைந்தது ஒரு % ஏழைகளுக்கு யார் செய்கிறார்க்ளோ அவர்தான் சூப்பர் ஸ்டார் ஆவர்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04 செப், 2019 - 09:58 Report Abuse
Natarajan Ramanathan சந்தேகமே இல்லாமல் அடுத்த சூப்பர் ஸ்டார் பிரபாஸ்தான்.
Rate this:
Aathavan - chennai,இந்தியா
04 செப், 2019 - 08:29 Report Abuse
Aathavan இந்த 40 வருடத்தில் இந்த மாதிரி சொல்லி கொண்டு எத்தனை பேர் காணாமல் போயி விட்டார்கள்.
Rate this:
sathish -  ( Posted via: Dinamalar Android App )
03 செப், 2019 - 19:51 Report Abuse
sathish சூப்பர் ஸ்டார விடவா....! அது சரி நினைப்பு சில நேரம் பொழப்ப கெடுத்திரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in