சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா |
ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்குவதற்கு முன்பே தனுஷை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார் கார்த்திக் சுப்பராஜ். திடீரென்று ரஜினி அழைத்து விட்டதால் தனுஷ் படத்தை தள்ளி வைத்திருந்தவர், இப்போது அந்த படத்தை லண்டனில் தொடங்கியிருக்கிறார். இந்திய வம்சாவளி கேங்ஸ்டர் மற்றும் ஐரோப்பிய கேங்ஸ்டருக்கிடையே நடக்கும் மோதல் கதையில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
தனுஷின் 40வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இப்படத்தில் தற்போது ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் உறுதி செய்திருக்கிறார். இவர், பிரேவ் ஹார்ட், டிராய், எலிமினேட்டர், வொண்டர்வுமன், பெண்ஹர் உள்பட பல படங்களில் நடித்தவர்.