ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் | கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படம் செப்டம்பர் 6ம் தேதி சீனாவில் 47000 திரைகளில் வெளியாக உள்ளது. அதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது.
இதுவரையில் நடந்துள்ள முன்பதிவு மூலம் 1 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. படத்தின் முதல் நாளிற்கு நல்ல முன்பதிவு கிடைத்துள்ளது. அதற்கடுத்த நாட்களுக்கு மிகச் சுமாராகத்தான் முன்பதிவு நடந்துள்ளதாம்.
படம் வெளியாகி அதன்பின் வரும் விமர்சனங்களைப் பொறுத்து வசூல் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். சீனாவில் ஹிந்திப் படங்கள் மட்டுமே நல்ல வசூலை அள்ளுகின்றன. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் கூட பெரிய அளவில் வசூலிக்கவில்லை.
2.0 சீனாவில் சாதனை படைக்குமா அல்லது பின்னடைவை சந்திக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.