பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று ஆந்திராவில் போராடிய குறுநில மன்னன் சைரா நரசிம்ம ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகி வருகிறது.
சிரஞ்சீவி, சைரா நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். சுதீப் அவரது படைத் தளபதியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி அவருக்கு உதவி செய்யும் தமிழ்நாட்டு மன்னர் ஒருவராக நடிக்கிறார். இவர்கள் தவிர நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ரவி கிஷன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அமிதாப் பச்சன் நரசிம்ம ரெட்டியின் குருவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார், அமித் திரிவேதி பாடல்களுக்கும், ஜுலியஸ் பக்கிம் பின்னணிக்கும் இசை அமைக்கிறார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை சிரஞ்சீவின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். படத்தில் தமிழ் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகமாக பணியாற்றுகிறார்கள். இதனால் படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள். இதுதவிர இந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அக்டோபர் 2ந் தேதி வெளிவருகிறது.