Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா உடன் நடந்தது குடும்ப சண்டை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

03 செப், 2019 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Fight-with-Ilayaraja-is-like-family-issue-says-SP-Balasubramaniyam

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் மகன் சரண் ஏற்பாட்டின் பேரில் அமெரிக்க நகரங்களில் எஸ்பிபி-50 என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது திடீரென இளையராஜா, "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நான் இசை அமைத்த பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது" என்று நோட்டீஸ் அனுப்பினார். இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. அதன் பின் பல மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கட்டிபிடித்தபடி இருந்த போட்டோக்கள் வெளியானது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சென்னையில் நடந்த இசை விழாவில் இருவரும் இணைந்து பாடினார்கள். இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நவம்பர் மாதம் 3ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. நிகழ்ச்சி தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இளையராஜாவுடனான மோதல் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் சேர்ந்து விடுவார்கள். அதுமாதிரி தான் எங்களுக்கும் நடந்தது. காரணம் நாங்கள் ஒரே இசை குடும்பம்.

இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை சிறியது தான். இருவரும் அதை மறந்து விட்டோம். உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.

இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். நான் ஒரு அருகம்புல் என்றார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவத்தை படமாக்கிய இயக்குனருக்கு மிரட்டல்பொள்ளாச்சி சம்பவத்தை படமாக்கிய ... தமிழிலும் வருகிறார் சைரா நரசிம்ம ரெட்டி தமிழிலும் வருகிறார் சைரா நரசிம்ம ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Girija - Chennai,இந்தியா
06 செப், 2019 - 06:49 Report Abuse
Girija ரொம்ப ஷோ பண்ணினா திகட்டிவிடும் , சுசீலா மாதிரி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தால் அதன் மதிப்பே தனி . இருவருக்கும் சேர்த்துதான். வைஷ்ணவா மகளிர் கல்லூரி கொஞ்சம் ஓவர், எஸ் பி பி டி வீ நிகழ்ச்சிகளில் ரொம்ப ரொம்ப ஓவர் . அவர் பாடல்களில் எத்தனை உச்சரிப்பு ஸ்வரம் தவறுதல் செய்துள்ளார் என்பதை மறந்துவிட்டு குழந்தைகளை கடும் விமர்சனம் செய்கிறார் .
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05 செப், 2019 - 23:44 Report Abuse
Nallavan Nallavan பணம்தான் பிரிச்சுது ........... திரும்ப பணம்தான் இணைச்சுது ...........
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05 செப், 2019 - 07:06 Report Abuse
Nallavan Nallavan கண்கள் பனித்தன ............ இதயங்கள் இனித்த .........
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
04 செப், 2019 - 14:08 Report Abuse
Anvardeen டயர்
Rate this:
swega - Dindigul,இந்தியா
03 செப், 2019 - 18:46 Report Abuse
swega குடும்பவாவது ஒன்னாவது. எல்லாம் பணம் படுத்தும் பாடு
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in