Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொள்ளாச்சி சம்பவத்தை படமாக்கிய இயக்குனருக்கு மிரட்டல்

03 செப், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Threaten-to-Director

நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதுவும் குறிப்பாக நவீன டிஜிட்டல் யுகத்தில் செல்போனால் வரும் பிரச்சினைகள் குறித்து நிறைய படங்கள் பந்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும், பேஸ்புக் காதல் பற்றியும் கருத்துகளை பதிவு செய் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி இருக்கிறது.

இந்தப்படத்தை ராகுல் பரமகம்சா இயக்கியிருக்கிறார். ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன், உபாசனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதில் ஆர்யன் மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார், மனோகர் ஒளிப்பதி செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ராகுல் பரமகம்சா கூறியதாவது: பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து பெண்களும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். இந்தப்படம் எடுத்தால் எனக்கு மிரட்டல் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தர வேண்டும் என்ற நோக்கில் எடுத்துள்ளேன்.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்பே நான் படத்தை ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு நடந்த பொள்ளாச்சி சம்பவமும் எனது கதையும் ஒரே போன்று இருந்தது. இதனால் ஆரம்பத்தில் சில மிரட்டல்கள் வந்தன. அதன் பிறகு எதுவும் வரவில்லை. மீண்டும் வந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன். சில நல்ல விஷயங்களை சொல்லும்போது அதற்கு எதிர்ப்பு வருவது இயற்கை தான் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெருக்கூத்து கலைஞராக பாடலாசிரியர் சினேகன்தெருக்கூத்து கலைஞராக பாடலாசிரியர் ... இளையராஜா உடன் நடந்தது குடும்ப சண்டை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளையராஜா உடன் நடந்தது குடும்ப சண்டை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
07 செப், 2019 - 07:57 Report Abuse
Parthasarathy Badrinarayanan அசிங்கமான வேதனையான சம்பவத்தை காசாக்கும் தரங்கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 செப், 2019 - 06:31 Report Abuse
skv srinivasankrishnaveni இன்னிவரை அந்த நாய்கள் என்ன ஆச்சுன்னே தெரியலியே பின்னாடி இருந்த பெரிய மனசா எல்லாம் என்ன ஆனாங்க , பல படங்கள் அசிங்கமாதான் இருக்கு மாடர்ன் என்றபெயரில் பொண்ணுகளைக்கேவலமா காட்டியே காசு சேர்க்காது சினி கும்பல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in