Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நல்ல இயக்குநருடன் இணைந்ததில் மகிழ்ச்சி: ஆர்யா

02 செப், 2019 - 16:51 IST
எழுத்தின் அளவு:
I-am-happy-acting-in-Good-directors-film-says-Arya

மவுன குரு இயக்கிய சாந்தகுமாரின் இயக்கத்தில் நடிகை ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாமுனி. இந்தப் படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகர் ஆர்யா கூறியதாவது:

மவுன குரு படத்தைப் பார்த்து, இயக்குநர் சாந்தக்குமாரின் அசாத்திய திறமையைக் கண்டு அதிர்ந்து போனேன். அப்போதே, அவரது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என நினைத்தேன். அதற்கேற்றார் போல, அவரே, மகாமுனி படத்துக்காக என்னை தேர்வு செய்திருந்தார். படத்தின் கதையை என்னிடம் கொன்ன விதமே எனக்கு, பிடித்துப் போனது. மீண்டும் ஒரு முறை அவரது திறமை கண்டு வியந்தேன்.

முதலில், அவர், படத்தில் மகா , முனி என இரு கேரக்டர்கள் உண்டு. இரு கேரக்டர்களையும் நீங்கள்தான் செய்யப் போகிறீர்கள் என சொன்னார். கூடவே, இப்போது, மகா கேரக்டர் பற்றி மட்டும் தான் சொல்வேன்; முனி கேரக்டர் குறித்து எதுவுமே சொல்ல மாட்டேன். படத்தில் நடிக்கும்போது, என்ன செய்ய வேண்டும்; எப்படி நடிக்க வேண்டும் என்று மட்டும் சொல்வேன். அதிலிருந்து, முனி கேரக்டரை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றார்.

அவர் சொன்னது போலவே, நான் முனி கேரக்டர் பற்றி எதுவுமே கேட்கவில்லை. அவர் சொன்னது போலவே நடித்தேன். அதன்பின் தான், படத்தில் முனி கேரக்டர் எத்தனை வெயிட்டானது என புரிந்து கொண்டேன். படம் பிரமாதமாக வந்திருக்கிறது. மகா கேரக்டருக்கு ஜோடி மஹிமா நம்பியார். முனிக்கு ஜோடி இந்துஜா. படம் ஒரே கலக்கலாத்தான் இருக்கும். ஒரு அற்புதமான இயக்குநருடன் இணைந்து பணியாற்றிய சந்தோஷத்தில், மொத்த படக் குழுவுமிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகாமுனி என் வாழ்நாளில் சிறந்த படம்: மஹிமா நம்பியார்மகாமுனி என் வாழ்நாளில் சிறந்த படம்: ... ரஜினி படத்திற்கு இமான் இசை ரஜினி படத்திற்கு இமான் இசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
02 செப், 2019 - 20:40 Report Abuse
எதிர்க்குரல் இயக்குனர்தான் கேப்டன் ஆப் தி ஷிப் என்பதை புரிந்து நடித்தால் வெற்றி நிச்சயம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in