Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாமுனி என் வாழ்நாளில் சிறந்த படம்: மஹிமா நம்பியார்

02 செப், 2019 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Mahamuni-is-best-movie-in-my-life-says-Mahimanambiyar

மகாமுனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று, சென்னையில் நடந்தது. படத்தின் பிரதான கேரக்டரில் நடித்திருக்கும் மஹிமா நம்பியாரும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அவர், பேசியதாவது: மகாமுனி படத்தில், ஒரு பங்காக, நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பேன். நானே என்னை, இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் இத்தனை சிறப்பாக நடிப்பேன் என நினைத்து பார்த்ததில்லை. ஆனால், இயக்குநர் சாந்தகுமார், அப்படியொரு கதாபாத்திரத்தை, எனக்கு வழங்கியிருக்கிறார். என்னுடைய சினிமா வாழ்க்கையில், மகாமுனியில் எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் போது, ஜெயசுதா, எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன், நடிகர் ஆர்யா எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவருடன் நடித்த போதுதான், அவர் ஒரு கடின உழைப்பாளி; அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர் என்பது தெரிந்தது.

ஒரு காட்சியைப் படமாக்கும்போது, 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நடிகர் ஆர்யா, அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தயாராக நிற்பார். இந்தப் படத்தினால், அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா.

இவ்வாறு மஹிமா நம்பியார் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னை மையமாக வைத்து கதைகள் எழுதப்படுகின்றன: வித்யா பாலன்என்னை மையமாக வைத்து கதைகள் ... நல்ல இயக்குநருடன் இணைந்ததில் மகிழ்ச்சி: ஆர்யா நல்ல இயக்குநருடன் இணைந்ததில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in