கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கும் படம் ‛ஆக்ஷன்'. விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகாஷ்னா பூரி, கபீர் சிங், ராம்கி, யோகிபாபு, நடிக்கிறார்கள். ஆதி இசை அமைக்கிறார், டியூட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல வெளிநாடுகளில் நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்புகளை முடித்து விட்டு திரும்பியிருக்கும் சுந்தர்.சி படம் பற்றி கூறியதாவது:
விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். தற்போது இருவரும் “ஆக்ஷன்” படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.
70 சதவிகிதம் வெளிநாடுகளிலும் , 30 சதவிகிதம் ஜெய்ப்பூர், டில்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது. இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால் படத்தின் டைட்டிலையும் ஆக்ஷன் என்றே வைத்து விட்டேன்.
ஒரு படத்திற்கு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை ஹிந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அனைத்து மொழிகளிலும் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.
தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் இயக்கத்தான் ஆசை. நான் எல்லா பாணியிலும் படம் இயக்கி உள்ளேன்.
இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. சுபாஷ் என்கிற ராணுவ அதிகாரியாக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக, ராம்கி குணசித்ரமாக, யோகி பாபு காமெடியனாக நடித்துள்ளனர். பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளிவருகிறது என்றார்.