Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் தவறில்லை; ஆனால், விழிப்புணர்வு அவசியம்: த்ரிஷா

30 ஆக, 2019 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Trisha-awareness-to-women

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என நடிகை த்ரிஷா கூறினார். சென்னை, எண்ணூரில் இருக்கும் சமுதாய நலக் கூடத்தில், பெண்கள் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா, பெண்கள் பாதுகாப்புச் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி: நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எப்போதும் பாதுகாப்பு வேண்டும். அதனால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை எல்லோரும் கைவிட வேண்டும். சிறு வயது திருமணம் நல்லதல்ல; பாதுகாப்பானது அல்ல. திருமண வாழ்க்கை குறித்த ஒரு நல்ல புரிதல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட்ட பின் தான், திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான், திருமண வாழ்க்கையில் புகும் எந்தப் பெண்ணும், வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடர்வார். இல்லையென்றால், பெண்ணின் வாழ்க்கையே தாறுமாறாகி, எல்லாமே கெட்டு விடும். எனவே, பெண் குழந்தைகளுக்கு, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கக் கூடாது. அதோடு, திருமணம் குறித்த முறையான விழிப்புணர்வையும்; அறிவையும், ஒவ்வொரு பெற்றோரும், பெரியவர்களும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

காதல் செய்வதில் ஒரு போதும் தவறில்லை. ஆனால், காதல் என்றால் என்ன... காமம் என்றால் என்ன என்பதையெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணமும்; பக்குவமும் வந்த பின், காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் சரி. அதுதான், பிள்ளைகளுக்கான பாதுகாப்பு. குழந்தைத் திருமணம் ஒருபோதும் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தரையிறங்கிய விமானம்; ஆபத்தில் இருந்து தப்பிய சரத்குமார்தரையிறங்கிய விமானம்; ஆபத்தில் ... நாளை  நம்ம வீட்டுப் பிள்ளை இசை நாளை நம்ம வீட்டுப் பிள்ளை இசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sasiendran - sydney,ஆஸ்திரேலியா
24 செப், 2019 - 16:29 Report Abuse
sasiendran Ok Thanks, my favourite game cricket, In The seasons enjoy life, trisha i like you,
Rate this:
sasiendran - sydney,ஆஸ்திரேலியா
24 செப், 2019 - 16:25 Report Abuse
sasiendran good love is great,but sometime thing movement ஓகே தேங்க்ஸ்.
Rate this:
Sharvintej - madurai,இந்தியா
31 ஆக, 2019 - 05:22 Report Abuse
Sharvintej சிறு வயது திருமணம் நல்லது இல்லை தான் . ஆனால் பெரு வயதில் திருமணம் நடக்காமல் இருப்பதும் நல்லது இல்லை தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in