யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவிற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஜய தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் அனிஷாவும் நடித்திருந்தார். அக்டோபரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
கடந்தவாரம் திடீரென்று நிச்சயதார்தத்தின்போது விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் அனிஷா. விஷால் - அனிஷா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று(ஆக.,29) விஷாலுக்கு பிறந்தநாள். விஷாலுடன் தான் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் ‛‛பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டார். ஜொலிப்பதற்காகவே பிறந்தவர் நீங்கள்'' என்று கூறியுள்ளார் அனிஷா.
அனிஷாவின் இந்த பதிவால் இருவருக்கும் இடையேயான உறவில் எந்த பிரச்னையும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இவர்களின் பிரச்னையை பேசி தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. திட்டமிட்டபடி அக்டோபரில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.