Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரவீந்திரன் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்

30 ஆக, 2019 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Adutha-Saatai-Producer-slams-Libra-productions-ravinderan

'11:11 புரொடக் ஷன்ஸ்' சார்பில், சமுத்திரக்கனியுடன், டாக்டர் பிரபுதிலக் இணைந்து தயாரிக்கும் படம், அடுத்த சாட்டை. படத்தை, லிப்ரா நிறுவனம் சார்பில், ரவீந்திரன் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் பேசியபடி, பணத்தை தராமல் இழுத்தடித்ததால், மற்றொரு நிறுவனம் வழியாக, படம் வெளியிடப்பட உள்ளது.


இது குறித்து, தயாரிப்பாளர் பிரபு திலக் கூறியதாவது: அடுத்த சாட்டை பட அறிமுக விழாவின் போது, 'படத்தை நானே வாங்கி வெளியிடுகிறேன்' என, ரவீந்திரன் கூறினார். ஒப்பந்தம் ஏதும் போடாமல், நம்பிக்கை அடிப்படையில், நானும், சமுத்திரக்கனியும் சம்மதித்தோம். ஆனால், அவர் பேசியபடி, பணத்தை வழங்கவில்லை. அவர் வழங்கிய காசோலைகள், பணம் இல்லாமல் திரும்பின.


இது குறித்து, அவரிடம் கேட்டதற்கு, மழுப்பலான பதில்களே வந்தன. ஒரு வழியாக, பல தவணைகளில், 50 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால், அவர் பேசிய முழு தொகையையும் தரவில்லை.இதனால், 'குறித்த நாட்களுக்குள், முழு தொகையையும் தராவிட்டால், வேறு நிறுவனத்தை வைத்து, படத்தை வெளியிடுவோம்' என, அவருக்கு, 'இ - மெயில்' வழியாக, தகவல் அனுப்பினேன். அதற்கும், அவர் பதில் தரவில்லை. படத்தின் வியாபாரம் பாதித்ததால், 'லிப்ரா ரவீந்திரனுக்கும், அடுத்த சாட்டை படத்திற்கும், எந்த தொடர்பும் இல்லை' என, சமுத்திரக்கனி, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்தார்.'ஏன்' என, பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நேர்மையில்லை' என, சமுத்திரக்கனி பதிவிட்டார்.


இந்நிலையில், 'படத்தின் பணிகள் முடியவில்லை' என, ரவீந்திரன், பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அது, முற்றிலும் தவறானது. படம், சென்சாருக்கு சென்றுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்; விரைவில், படம் திரைக்கு வரும். லிப்ரா ரவீந்திரன், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அடுத்த சாட்டை படம் தொடர்பாக, வேறு யாரிடமாவது, லிப்ரா ரவீந்திரன் ஒப்பந்தம் போட்டிருந்தாலும், பணம் பெற்றிருந்தாலும், அதற்கும், எங்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.


இவ்வாறு, பிரபு திலக் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிலையான இடம் கிடைக்குமா?நிலையான இடம் கிடைக்குமா? 'அடாவடி பெண் நான்' - நிகிஷா 'அடாவடி பெண் நான்' - நிகிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in