Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் போன்று தண்டனை: த்ரிஷா

28 ஆக, 2019 - 18:09 IST
எழுத்தின் அளவு:
Sexual-harrashment:-need-punishment-like-gulf-countries-says-Trisha

பாலியல் குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்றும், ‛நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்ததற்காக, அஜித்தை பாராட்டுவதாக த்ரிஷா கூறியிருக்கிறார்.

சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நடிகையும், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் த்ரிஷா பங்கேற்றார்.

அவர் கூறுகையில், சினிமா என்பது ஒரு கற்பனை; சினிமாவை சீரியசாக எடுத்து கொள்ளத் தெவையில்லை. சினிமா தான் வாழ்க்கை என எல்லோரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. அதை நினைக்கையில், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சமூக வலைத்தளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. அதனால், குழந்தைகள் அதைப் பயன்படுத்தும்போது, பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான தண்டனையும்; உடனடி தண்டனையும் வழங்கப் பட வேண்டும். அப்போதுதான், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறையும். தண்டனை மீது குற்றவாளிகளுக்கு பயம் எதுவும் இல்லாததாலேயே, குற்றங்கள் அதிகரிக்கின்றன.

‛நேர் கொண்ட பார்வை' படத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பு சூப்பர். அவர் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதே சிறப்பு. அவரை நான் வெளிப்படையாகவே பாராட்டுவேன். ஏன் என்றால், நடிகர் அஜித்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இது, அனைவருக்கும் தெரியும்.

96 படத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என பலரும் என்னிடமே கேட்கின்றனர். அதே கேள்வியைத்தான் நானும் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு யாரிடம் தான் விடை இருக்கிறது என தெரியவில்லை. தெரிந்தால், யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

இவ்வாறு த்ரிஷா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குநர்களின் மோசமான நடவடிக்கைகள்: வித்யா பாலன் வேதனைஇயக்குநர்களின் மோசமான நடவடிக்கைகள்: ... தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? - தனுஷ் தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

oce - tokyo,ஜப்பான்
31 ஆக, 2019 - 01:00 Report Abuse
oce அரபியர்கள் பல பெண்களை மணப்பவர்கள். கொழுப்பேறிய தீனியில் அதிகமான பாலியலில் ஈடுபடுபடுவதுடன் அவர்களது உணவுகளில் கொழுத்த இறைச்சி முந்திரி பருப்பு வேர்க்கடலை அதிக மிருக்கும். அதனால் அங்கு அதற்கு கடுமையான தண்டனை உள்ளது. இந்தியாவில் அப்படி இல்லை.
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
29 ஆக, 2019 - 13:09 Report Abuse
suresh kumar அரபு நாட்டு தண்டனை தரலாமா?
Rate this:
RSaminathan - Thirumangalam - Abu Dhabi,இந்தியா
28 ஆக, 2019 - 20:20 Report Abuse
RSaminathan - Thirumangalam தொடையயும் தொப்புளையும் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் மார்பில் பச்சை குத்தி அதை எல்லோரும் பார்க்க வேண்டி காட்டுவதற்கும் அரேபிய தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in