Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநர்களின் மோசமான நடவடிக்கைகள்: வித்யா பாலன் வேதனை

28 ஆக, 2019 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Vidaya-balan-shares-worst-experience-in-Tamil-industry

சமீபத்தில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்தவர் ஹிந்தி நடிகை வித்யாபாலன். தமிழ் படங்களில் நடிக்க சரியான வாய்ப்புக் கிடைக்காததால் மும்பைக்குச் சென்று ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கி, அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் குறித்து பெயர் குறிப்பிடாமல் கூறியிருக்கிறார். அதில், அவர்கள் தன்னிடம் எப்படி மோசமாக நடந்து கொண்டனர் என்பது குறித்துச் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் நடிக்கத்தான் எனக்கு ரொம்ப ஆசை. ஆனால், அதற்காக முயற்சித்தபோது, என்னையும், என்னுடைய முகத்தையும் கேவலப்படுத்துவது போல ஒரு இயக்குனர் பேசினார். அவமானத்தால் கூனிக் குறுகினேன். நிறைய இயக்குநர்கள், உனக்கு சினிமா சரிபட்டு வராதும்மா என்று சொல்லி அனுப்பினார்கள். முகத் தோற்றத்தை கேவலமாக விமர்சித்த அந்த இயக்குநரை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. அதேபோல, அவரை என்னால் மன்னிக்கவும் முடியாது.

ஒரு நாள், ஒரு இயக்குநர் எனக்கு சினிமா வாய்ப்புகள் அளிப்பதாக கூப்பிட்டார். அவரை நம்பி, அவர் இருந்த அறைக்குச் சென்றேன். அவர், என்னை தனிமையிலேயே சந்திக்க விரும்பியதோடு, அறை கதவை சாத்த முயன்றார். நான் அறைக் கதவு திறந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனால், அவர் மேற்கொண்டு என்னிடம் பேச விரும்பாமல், பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அந்த நிகழ்வுகளையெல்லாம் என்னால் மறக்க முடியவில்லை.

இவ்வாறு வித்யா பாலன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
புருஷன் எடுத்த பொல்லாத போட்டோவிற்கு 10 லட்சம் லைக்ஸ்புருஷன் எடுத்த பொல்லாத போட்டோவிற்கு ... பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் போன்று தண்டனை: த்ரிஷா பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
04 செப், 2019 - 06:23 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஆண்மை என்ற பதத்தின் அர்த்தத்தை திரைப்படத்துறையிலுள்ள சில ஆண்கள் மாசுபடுத்திவிட்டார்கள்.
Rate this:
mohan - chennai,இந்தியா
30 ஆக, 2019 - 20:29 Report Abuse
mohan நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமா தொழில் இப்பொழுது இல்லை...
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29 ஆக, 2019 - 04:33 Report Abuse
Mani . V "வாய்ப்புக்காக நாங்கள் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களிடமும், டைரக்டர்களிடமும் 'எல்லா' வகையிலும் அனுசரித்து போவோம். வளர்ந்த பிறகு அவர்கள் மட்டுமே அயோக்கியர்கள் என்றும், நாங்கள் யோக்கியர்கள் என்றும் பேட்டி கொடுப்போம்".
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
30 ஆக, 2019 - 00:18Report Abuse
vivek c maniவித்யா பாலனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.அனுசரித்தும் போகவில்லை. பிறகு ஏன் இந்த ஓலம்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in