Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து கடவுள் பெயருக்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்

28 ஆக, 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Music-director-denied-to-compose-music-for-Hindu-name-movie

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் சமீப காலங்களில் இந்து அல்லாத இசையமைப்பாளர்கள் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால், கலை என்று வரும் போது எந்த ஒரு சினிமா ரசிகரும் அவர் இந்து, அவர் கிறிஸ்துவர், அவர் முஸ்லிம் எனப் பார்த்து அவர்களது பாடல்களை ரசிப்பதில்லை. அவர்களுடைய இசையைத்தான் சினிமா ரசிகர்கள் பெரிதும் விரும்பி ரசிக்கிறார்கள்.

ஆனால், சில இந்து அல்லாத இசையமைப்பாளர்கள் இந்து கடவுள்களின் பெயர் வந்தால் இசையமைக்க மறுப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. தமிழில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் ஒருவர் கூட சில வருடங்களக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐயப்பன் பற்றிய பக்திப் பாடலுக்கு இசையமைக்க மறுத்தார். பின்னர் வேறு ஒரு இசையைமப்பாளரை வைத்து அந்தப் பாடலைப் பதிவு செய்தார் அந்த பிரபலமான இயக்குனர்.

இப்போது அது போன்றதொரு விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் சர்ச்சையில் எழுந்துள்ளது. பிரபல பாடலாசிரியரான ஆனந்த் ஸ்ரீராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார். “நான் எழுதிய ஒரு பாடலில் இந்து கடவுள் பெயர் ஒன்று வந்தது. அந்தப் பெயர் வந்ததால் அந்தப் பாடலுக்கு இசையமைக்க அந்த இசையமைப்பாளர் மறுத்துவிட்டார்,” என்று தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இசையமைப்பாளர் யார் என்பதற்கு அவர் பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். அப்படி சொன்னால் அந்த இசையமைப்பாளரின் இமேஜும் பெயரும் கெட்டுவிடும் என்று சொல்லியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலரது பெயர்களைச் சொல்லி, அவரா, இவரா எனக் கேட்டு வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய
சப்டைட்டில் பண பாக்கி விவகாரம், லைக்கா விளக்கம்சப்டைட்டில் பண பாக்கி விவகாரம், ... பிக்பாஸ் வெளியேற்றம்: அமைதி காக்கும் கஸ்தூரி பிக்பாஸ் வெளியேற்றம்: அமைதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (52)

கல்யாணராமன் - Chennai,இந்தியா
04 செப், 2019 - 13:52 Report Abuse
கல்யாணராமன் பெயரை சொல்லாத போது இப்படி ஒரு செய்தியை வெளியிட கூடாது.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
02 செப், 2019 - 15:15 Report Abuse
s.rajagopalan யார் அந்த இசையமைப்பாளர்.? உத்தர பிரதேசத்திற்கு உள்ள நபர்களுக்கு செய்தி அனுப்புங்கள். .....?
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 ஆக, 2019 - 19:48 Report Abuse
Vasudevan Srinivasan இந்த நேரத்தில் பெருமதிப்புக்குரிய ஐயா கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் பெருமையையும் பண்பையும் நினைத்து பாருங்கள் அவரும் ஜாதி மத பேதம் பார்க்காமல் தான் பாடுகிறார் ரசிகர்களும் அவரது பாடல்களுக்கு இன்றும் அடிமையாகத்தான் இருக்கின்றனர்..
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
30 ஆக, 2019 - 14:47 Report Abuse
Siva தமிழ்நாட்டில் மாட்டு வதம் நிறுத்தனும்... அப்ப கொழுப்பு குறையும்...
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
30 ஆக, 2019 - 14:44 Report Abuse
Siva பிரபலமாகுமுன் சோறு கிடைக்கலே.. இப்ப எண்ணமுடியாத பணம்... நடுவீட்டிலும் அது அதுதானே..
Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in