Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சப்டைட்டில் பண பாக்கி விவகாரம், லைக்கா விளக்கம்

28 ஆக, 2019 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Lyca-productions-clarify-about-sub-title-money-issue

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த '2.0' படத்திற்கு சப்டைட்டில் வேலைகளைச் செய்த ரேக்ஸ் என்பவர் அவருக்கு அந்தப் பணிக்கான சம்பளத்தை இன்னும் தரவில்லை என்று டுவிட்டரில் வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அதைத் தொடர்ந்து அது பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்தன.

இந்நிலையில் அவர் குற்றம்சாட்டி இத்தனை நாட்கள் ஆன பிறகு அதற்கான விளக்கத்தை லைகா நிறுவனம் டுவிட்டர் மூலமே வெளியிட்டுள்ளது.

அதில், “நாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு சப்டைட்டில் பணிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் வழக்கம். அது தொடர்பான டெக்னிக்கல் வசதிகளை நாங்களே வைத்திருக்கிறோம். ரேக்ஸ் 2.0 படத்திற்காக எங்களிடம் 2 லட்ச ரூபாய் கேட்டார். நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அவருடைய சொந்த விருப்பத்தில் அந்தப் பணியைச் செய்தார். சம்பளம் பற்றி பின்னர் பேசிக் கொள்ளலாம் என்றார். அவர் சொன்ன சம்பளத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

சமீபத்தில் அவர் மீடியாவிடம் எங்களைப் பற்றி தவறாகக் கொண்டு போய் சேர்த்துள்ளார். பத்து நாட்கள் முன்னதாக அவரைத் தொடர்பு கொண்டு 1 லட்ச ரூபாய் தருவதாகச் சொன்னோம். அது எங்களது பட்ஜெட்டில் இல்லாத ஒன்று. தாமதம் ஆன காரணத்தாலும், நல்லெண்ணத்திலும் அந்தத் தொகையைத் தர நினைத்தோம். ஆனால், ரேக்ஸ் 2 லட்ச ரூபாய் கேட்டார். மார்க்கெட் நிலவரப்படி எங்களால் அதைக் கண்டிப்பாகக் கொடுக்க முடியாது.

நாங்கள் பல்வேறு விதமான படங்களைத் தயாரித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் பணம் கொடுப்பதில் சிக்கல் வைத்ததில்லை. வழக்கமாக சம்பளத்தைக் குறைத்துப் பேசுவதைத்தான் செய்வோம். ஆனால், மீடியாவில் எங்களது இமேஜைக் கெடுக்கும் விதத்தில் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.

அவருக்கு நாங்கள் 1 லட்ச ரூபாய் தரத் தயாராக இருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர் பல தடைகளுக்குப் பிறகு அவர்களது உழைப்பையும், வியர்வையையும் சிந்தி படத்தை எடுக்கிறார்கள். ஆனால், ஒரு டுவீட்டல் அவர்களது இமேஜைக் கெடுப்பது எளிது.

நாங்கள் ஒவ்வொருவரது ஈடுபாட்டையும் மதிக்கிறோம். அவர்களது உழைப்பை படத் தயாரிப்பில் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடுவதில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்பிக்பாஸ் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட ... இந்து கடவுள் பெயருக்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர் இந்து கடவுள் பெயருக்கு இசையமைக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in