Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

28 ஆக, 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Srireddy-shocking-statement-about-biggboss

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில ஆபாசமான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே நடிகை ஸ்ரீரெட்டியும் சர்ச்சைகளுக்குப் பேர் போனவர். சினிமாவில் பெண்களை படவாய்ப்புகள் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறியது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தொடர்பாக ஸ்ரீரெட்டி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், “பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேச வேண்டும் என கூறி ஐதராபாத் கோல்கொண்டா ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் சில கேள்விகள் கேட்டார். நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருவரை ஜோடியாக்கி கேமரா ஓடிக் கொண்டிருக்கும்போதே கட்டிலில் ப்ளாங்கெட் போட்டுகொண்டு செக்ஸ் வைத்துக்கொள்ள தயாரா? என கேள்வி வந்ததால் அதிர்ச்சியானேன். முடியாது என கூறிவிட்டேன்.

அதன்பிறகு உங்களுக்கு குட்டையான உடைகள் அணிந்து கொள்ள தயாரா என கேட்டார். அதற்கு ஓகே என்றேன். அதன்பிறகு என்னுடைய உடல் பாகங்கள் சைஸ் பற்றி அவர் கேட்ட சில கேள்விகள் தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா என யோசிக்கிறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கவினைத் திட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷிகவினைத் திட்டி வீடியோ வெளியிட்ட ... சப்டைட்டில் பண பாக்கி விவகாரம், லைக்கா விளக்கம் சப்டைட்டில் பண பாக்கி விவகாரம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 ஆக, 2019 - 19:54 Report Abuse
Vasudevan Srinivasan இது உண்மையா அல்லது ஒரு பரபரப்புக்காக சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டா, தெரியவில்லை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த நிகழ்ச்சி விவாகத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு எந்த இந்திய சேனலுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது..
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
29 ஆக, 2019 - 15:36 Report Abuse
Sanny அம்மணிக்கு இது ஒன்னும் புதியது அல்லவே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in