Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

60வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடும் நாகார்ஜுனா

28 ஆக, 2019 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-to-celebrate-60th-birthday-in-Spain

தெலுங்குத் திரையுலகின் என்றும் இளமையான நடிகர் என அழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. தெலுங்கில் அவர் நடித்து தமிழில் டப்பிங் ஆகி 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'உதயம், இதயத்தை திருடாதே' ஆகிய இரண்டு படங்கள் இங்கு சூப்பர் ஹிட்டாகவே ஓடின. அவர் நேரடியாக நடித்த 'ரட்சகன்' படம் தோல்வியடைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தோழா' படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

நாகார்ஜுனாவுக்கு நாளை 60 வயது பிறக்கிறது. அந்த சிறப்பான நாளை அவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடுகிறார். அங்குள்ள இபிசா தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது.

நாகார்ஜுனா, அவருடைய மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா, மற்றொரு மகன் அகில் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நாகார்ஜுனா குடும்பத்தினர் ஒரு வாரம் அங்கு தங்கியிருந்துவிட்டு அதன்பின்தான் இந்தியாவிற்கு திரும்புகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேங்ஸ்டர் படம் இயக்கும் பெண் இயக்குனர்கேங்ஸ்டர் படம் இயக்கும் பெண் ... அறிமுக இயக்குனர்களின் கைகளில் ஓணம் ரிலீஸ் அறிமுக இயக்குனர்களின் கைகளில் ஓணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in