மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! |
ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் அவ்வப்போது இணையதளங்களில் லீக் ஆகி வருகின்றன. ரஜினிகாந்த், நயன்தாராவுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி, யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சி, போலீஸ் உடையில் கம்பீரமாக நடந்து வரும் காட்சிகள் வெளியானது.
தற்போது ஜெய்ப்பூரில் போலீஸ் உடையில் ரஜினி நடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அருகில் நயன்தாரா நிற்கிறார். செல்போனில் எடுக்கப்பட்ட இந்தப்படம் தற்போது இணைய தளங்களில் பரவி வருகிறது.