உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு |
நிலாவை நினைவிருக்கிறதா? எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகம் அவர். அன்பே ஆருயிரே படத்தில் நடித்தார். அதன் பிறகு ஜாம்பவான், லீ, மருதமலை, கில்லாடி, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவரது இயற்பெயர் மீரா சோப்ரா. அந்த பெயருடன் ஹிந்தியில் சில படங்கள் நடித்தார்.
ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக ஆமதாபாத் சென்றவர், அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அதனை வீடியோ எடுத்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:
நான் ஆமதாபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறேன். அறையில் இருந்து உணவு ஆர்டர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியானேன். நீங்களே நன்றாக பாருங்கள். இதுபோன்ற ஓட்டல்களில் அதிக வாடகை கொடுத்து தங்கி இருக்கிறோம். ஆனால் அவர்களோ புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்த ஓட்டலில் தான் தங்கி இருக்கிறேன். இங்கு தங்கிய பிறகு எனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கான காரணத்தை இப்போதுதான் கண்டு பிடித்து இருக்கிறேன். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன்.
இவ்வாறு நிலா எழுதியுள்ளார்.