Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த சாட்டை, வியாபார சர்ச்சை...

28 ஆக, 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Adutha-saattai-business-in-issue

சமுத்திரக்கனி தயாரிப்பு நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் அடுத்த சாட்டை என்ற படம் உருவாகி வெளிவரத் தயாராக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வினியோக உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது. அது சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

இதனிடையே நேற்று நள்ளிரவில் லிப்ரா நிறுவனம் அதன் டுவிட்டரில், “நாங்கள் கொடுத்த 50லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும், அடுத்தசாட்டை திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்,” என்று பதிவிட்டிருந்தார்கள்.

அதற்கு சமுத்திரக்கனி, “லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பதில் டுவீட் போட்டார்.

தொடர்ந்து, நேர்மை இல்லை என்று ஒற்றை வரியில் மற்றுமொரு பதிவையும் போட்டிருந்தார். அது லிப்ராவைத்தான் குறிக்கிறது என்று தெரிகிறது.

இந்தப் படம் குறித்து இருவருக்கும் இடையில் வியாபாரம் நடந்து முடிந்து 20 நாட்களுக்குள்ளாகப் பிரச்சினை உருவாகி இந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் ஸ்டார் - விஜய் அம்மா கடிதம், பரபரக்கும் சர்ச்சைசூப்பர் ஸ்டார் - விஜய் அம்மா கடிதம், ... அத்தனைக்கும் ஆசைப்படாதே அத்தனைக்கும் ஆசைப்படாதே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 ஆக, 2019 - 19:57 Report Abuse
Vasudevan Srinivasan இப்போவெல்லாம் படம் தயாரிப்பது ரொம்ப சுலபம் ஆனால் அதை வெளியிடுவது ரொம்ப ரொம்ப கஷ்டம் போல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in