Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவல்துறையில் களைகள் : இயக்குநரிடம் போலீஸ் மன்னிப்பு

27 ஆக, 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Director-Ramana-slams-traffic-police

நடிகர் விஜய்க்கு திருமலை படம் மூலம் மிகப்பெரிய ஆக்ஷன் பிரேக் கொடுத்தவர் இயக்குநர் ரமணா. தொடர்ந்து அவரை வைத்து ஆதி படத்தையும் இயக்கினார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ரமணா, சற்று மீண்டு வருகிறார். இந்நிலையில் சாலை விதிகளை பின்பற்றி வந்த தன்னை போக்குவரத்து காவலர்கள் நடந்து கொண்ட விதத்தை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு வைரலாகி வருகிறது. ரமணா பதிவிட்டிருப்பதாவது...

காவல்துறையில் களைகள்

கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்... இன்று மேலே படத்திலுள்ள நான் சந்தித்த காவல் உதவி ஆய்வாளர் கே.குமரன், காவலர் எம்.ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக் கூட கருதத் தகுதியற்றவர்கள்.

நான், என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தது. சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச் சொல்லி, அங்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் குமாரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.

அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன். அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் குமார் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஒரு கான்ஸரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...

அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் ராமரிடம், பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப் பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு... என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட... வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போக வேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...

ஆனால் அந்த குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால் தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி, என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு வந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்க வேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோசமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.

குறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொடிக்கும் எங்களைப்போன்ற கேன்ஸர் போராளிகள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை... ஆனால், இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்... என்றும் கண்ணியமில்லாத வார்தைகளை சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம்.

செய்வார்களா...?

வேதனையுடன்
ரமணா

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


இதனிடையே நடந்த சம்பவத்திற்கு ரமணாவிடம் போலீசார் மன்னிப்பு கோரி உள்ளனர். பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

நெஞ்சார்ந்த நன்றிகள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்மவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்...


அதன் பலனாக, இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது.... அதன் விளைவாக இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் திரு. கிருஷ்ணமூர்த்தி (Asst. Commr of police / Traffic investigation/ East range), திருமதி K. ஷோபனா ( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range ) இருவரும் என் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.


மேலும், திரு. பெரோஸ் கான் அப்துல்லா ( Deputy commissioner of police / East Dist . Traffic ) என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.

இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிஸ் ஆர்வம் ஏன்?: சமந்தாவெப் சீரிஸ் ஆர்வம் ஏன்?: சமந்தா ஒரு போட்டோ ஷூட்டில் தெறிக்கவிட்ட ரம்யா பாண்டியன் ஒரு போட்டோ ஷூட்டில் தெறிக்கவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 ஆக, 2019 - 20:04 Report Abuse
Vasudevan Srinivasan பெரும்பாலும் காவல்த்துறையினர் மரியாதை குறைவாக பேசுவது கண்கூடு அவர்கள் தங்களது பணிச்சுமையினால் கொஞ்சம் பொறுமை இழந்து பேசுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் ஓர் எல்லை வேண்டுமல்லவா.. இது குறித்து உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் செய்தி அவவப்போது பத்திரிக்கைகளில் வருவதுண்டு.. ஆனால் 'அது ஒரு தொடர்கதை'...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
30 ஆக, 2019 - 14:47 Report Abuse
Jayvee தவறுசெய்த அந்த இரண்டு பேரை என்ன செய்தார்கள் ?
Rate this:
THANGARAJ - CHENNAI,இந்தியா
29 ஆக, 2019 - 07:10 Report Abuse
THANGARAJ இதே போல் எனக்கும் நடந்து இருக்கிறது, புகார் பதிவு செய்தேன், என்னை விசாரணை செய்தார்கள், கடைசியில் போலீஸ் நடவடிக்கை எடுத்தால், அந்த போலீஸ்காரர் வேலை இல்லாமல் போய்விடும், குடும்பம் நடுத்தெருவில் வந்துவிடும், ஆதலால் நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்று கூறி நம்மையே மன்னிப்பு கேட்க வைப்பார்கள். தவறு நம்மீது தான் என எழுதி வாங்கி வைத்துக்கொள்வார்கள். இது தான் நடவடிக்கையாக இருக்கும்.
Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
28 ஆக, 2019 - 09:15 Report Abuse
ராஜேஷ் நீங்க பெரும் வசதியும் இருப்பதால் உங்களிடம் தந்தவறுகளை உணர்ந்ததாக மண்டிருக்கின்றனர் . தினம் தினம் இவர்கள் சேம் அயோக்யத்தனத்திற்கு பலியாகும் எண்ணிலடங்கா ஏழைகளை நினைத்துமாறுங்கள் . திருடனாச்சும் ஒருதடவை திருடிட்டு ஓடிவிடுவேன் . அண்ணல் கக்கியுடையில் திரியும் பல அயோக்கியர்கள் தினம்திருக்கிறார்கள் . என்னால் ஏகப்பட்ட கறுப்பாடுகளை ஆதாரத்துடன் காட்டமுடியும் . அப்படியே காட்டினாலும் நீதி மறுக்கப்பட்டு தொல்லைகள் அதிகமாகும்
Rate this:
G.Prabakaran - Chennai,இந்தியா
28 ஆக, 2019 - 05:00 Report Abuse
G.Prabakaran இது போல் மிக முக்கியமான செய்திகளை சினிமா துறை சார்ந்தவர் காவலர்களால் பாதிக்கப்பட்டார் என்பது போன்ற செய்திகளையும் எங்கோ ஓர் மூலையில் சம்பவம் போன்ற பகுதியில் பதிவிடாமல் தினமலர் முதல் பக்கத்திலேயே பெரிதாக பதிவிடுங்கள். இது போன்ற காவலர்கள் மனிதர்களா அல்லது மிருகங்களா என தெரியவில்லை.
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in