விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
எழுத்தாளராக இருந்து நடிகர் ஆனவர் வேலை ராமமூர்த்தி. மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். முதன்முதலாக அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மயூரன். இதனை பாலாவின் உதவியாளர் நந்தன் சுப்பராயன் இயக்கியுள்ளார். அமுதவாணன், ஆனந்த் சாமி, அஸ்மிதா உள்பட பல பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி வேல ராமமூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:
ராணுவத்திலும், தபால் துறையிலும் பணியாற்றிவிட்டு எழுத்தாளராக மாறினேன் அதன் பிறகு மதயானை கூட்டம் மூலம் நடிகர் ஆனேன். தமிழ்சினிமாவில் ஒரு எழுத்தாளர் நடிகராக வெற்றி பெறுவது கடினம். ஆனால் நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.
எனது தோற்றத்துக்கும் உடல் மொழிக்கும் ஏற்ற கதாபாத்திரங்களோடு இளம் இயக்குனர்கள் என்னை தேடி வருகிறார்கள். முற்போக்கு சிந்தனையாளனாக இருந்தாலும் நான் நடிக்கும் படங்களில் வில்லனாக நடிக்கிறேன். நடிப்பும், எழுத்தும் தனித்தனியானவை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
திரைப்படங்களில் கதை ஆசிரியர்களுக்கு எப்போதுமே மரியாதை இருந்ததில்லை. இப்போது அது தொடர்கிறது. என்னிடம் திரைப்படத்திற்கான பல கதைகள் இருக்கிறது. ஆனால் அதை படமாக இயக்க யாரிடமும் கேட்க மாட்டேன். நிச்சயம் ஒரு நாள் என் கதை ஒன்றை நான் படமாக இயக்குவேன். அது நான் பிறந்த ராமநாதபுரம் பகுதி மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக இருக்கும். என்றார்.