Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி நிரூபித்தால் மொட்டை அடிப்பேன்: மன்சூர் சவால்

25 ஆக, 2019 - 12:23 IST
எழுத்தின் அளவு:
mansoor-ali-khan-challenges-rajini

நடிகர் ரஜினியோடு பல படங்களில் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர், தற்போது நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற அவர், எதிரில் மீன் வியாபாரிகள் பட்டால், அவர்களிடம் மீன் வாங்கி சுத்தம் செய்து கொடுப்பது, பஜ்ஜி, போண்டா கடைகளுக்குச் சென்று பஜ்ஜி, போண்டா போடுவது, அதை விற்பது, எதிரில் குழந்தைகள் தென் பட்டால், அதைத் தூக்கிக் கொஞ்சுவது-விளையாடுவது, டீக்கடைக்குச் சென்று டீ போடுவது, கறிக்கடைக்குச் சென்று கறிவெட்டுவது என பல காமெடிகளை செய்தார். ஆயிரக்கணக்கில் ஓட்டுக்களையும் பெற்றார்.


இதன் பின்னும், அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கூடவே, தனது மகன் துக்ளக்கை, கடமான் பாறை என்ற படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்.


அந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், சம்மந்தமே இல்லாமல், நடிகர் ரஜினியை வெளுத்து வாங்கினார்.


ரஜினியை விமர்சித்து அவர் பேசியிருப்பதாவது:


நான் நேற்று, இன்று மட்டுமல்ல; என்றைக்கும் நடிகர் ரஜினிக்கு ரசிகன் தான். அவரோடு படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், அவர் ஒரு கண்டுபிடிப்பாக, புதிய கருத்தைச் சொன்னாரே... அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதி இருந்தார் என எப்படி சொன்னார் என, இன்றளவிலும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இஷ்டத்துக்கு சொல்லி விட்டார். அதை, இன்றள்ள, என்றைக்கு இருந்தாலும், அவர் நிரூபித்துத்தான் ஆக வேண்டும். அவர் மட்டும் நிரூபித்து விட்டால், நான் என் தலையை மொட்டை அடித்துக் கொள்வேன்.


ரஜினி ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு ரஜினியிடம் இருக்கும் ஒவ்வொரு காசும், தமிழ் மண்ணில் இருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த காசு. தொழிலாளித்துவம் தோற்கும்; முதலாளித்துவம் ஜெயிக்கும் என ரஜினி நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. தொழிலாளித்துவம்தான் ஜெயிக்கும். படத்திலும் அப்படி காட்டினால்தான் படமே ஓடும்.


இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
கால்சீட் பிரச்னை வரும்; மணிரத்னம் படத்தை மறுத்த அருண் விஜய்கால்சீட் பிரச்னை வரும்; மணிரத்னம் ... தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா ? தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27 ஆக, 2019 - 05:19 Report Abuse
 nicolethomson உன்னோட மவன் படத்துக்கு பப்லிசிட்டி வேணும் அதுக்காக இப்படி ஒரு பேச்சு
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
26 ஆக, 2019 - 19:43 Report Abuse
Rajagopal தேர்தல்களில் டெபாசிட் இழந்து கொண்டே போங்க. அதுல ஒங்கத் தலை தானே மொட்டை ஆயிரும். நாம் தமிழர் புலி சீமான் பெண்ணுரிமை என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் முத்தலாக் சட்டத்தை எதிர்ப்பார். மன்சூர் அலி கான் மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டால் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 ஆக, 2019 - 17:28 Report Abuse
Vasudevan Srinivasan பட விழா அதுவும் சொந்த மகனின் அறிமுகப் படவிழா படத்தை பற்றி பேசுவதை விட்டு எதற்கு தேவை இல்லாததெல்லாம் பேசுகிறார் மன்சூர் அலிகான் சார்.. ..ம்ம் ஏதோ போறாத காலம்..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
26 ஆக, 2019 - 13:10 Report Abuse
Mirthika Sathiamoorthi 22 மே 2018 தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஒருவருடம் கடந்து விட்டது....இது தொடர்பாக மனித உரிமை கழகம் மற்றும் ஆளும் கட்சியின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் விசாரனை கமிஷன் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை...இவளவு நடந்திருக்கு, நடந்துகிட்டு இருக்கு... உண்மையை அறிய தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அந்த விசாரணையின் நிலை, மற்றும் அதன் போக்கை அறியலாம் இல்லை நீதிமன்றத்தை அணுகலாம்....ரஜினியை நிரூபிக்க சொல்வது? அவரென்ன ஓய்வு பெற்ற நீதிபதியா? இல்லை சிபிஐ அதிகாரியா? சமூக விரோதிகள் என யாரை கூறுவோம்? சட்டத்தை மீறுபவர்களை...144 தடை உத்தரவு இருக்கு அதை மீறுபவர்களை என்னவென்று சொல்வது? சாணக்கியரின் அறிவுரை "நோக்கம் நேர்மையானதாக இருந்தால் வழிமுறைகளை பற்றி கவலைப் படக்கூடாது". ஆனால் மகாத்மா சொன்னது நோக்கம் மட்டுமல்ல அதை அடையும் வழிமுறைகளும் நேர்மையானதாக இருக்கவேண்டும்".. அதனால்தான் அவர் தேர்ந்தெடுத்த பாதை அகிம்ஸை..தூத்துக்குடி போராட்டம் அகிம்ஸை வழி? உடனே சொல்லலாம் காவல்துறையின் அராஜகம் வன்முறையை தூண்டுகிறது.. அப்போ போராட்ட இடத்திற்கு காவல்துறையை அனுப்பக்கூடாதுங்கறீங்களா? இல்லை அவங்களுக்கு துப்பாக்கி, லத்தி, சீருடை எதுவும் இல்லாம அனுப்புன்னு சொல்றீங்களா? இல்லை போராட்டக்காரர்கள் செய்யும் செயல்களை கண்டும்காணாம இருக்கனும்ன்னு எதிர்பாக்குறீங்களா? அப்போ ஜனநாயகம் எதற்கு, அரசு எதற்கு, நீதிமன்றம் எதற்கு? இதைத்தான் ரஜினி சொன்னார்... உங்களுக்கு துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றால் அணுக வேண்டியது காவல்துறை மற்றும் நீதித்துறை.. அங்கே போங்க ரஜினியின் கருத்து பொய் என்று நீங்கள் நிரூபியுங்கள்.. அங்கெல்லாம் போகமாட்டேன் ஆனா ரஜினி நிரூபிக்கணும்கிற ஸ்டேட்மென்ட் எவ்வளவு அர்த்தமற்ற ஓன்று... இது பயத்தை தவிர வேறென்னவென்று சொல்ல? ரஜினியை எதிர்க்கவேண்டும் என முடிவுகட்டி அதற்கான காரணங்கள் தேடுகிறார் மன்சூர்.. உங்கள் அணுகுமுறை வெற்றிக்கு வித்திட்ட வாழ்த்துக்கள்...
Rate this:
Jagadeesan R - Kanchipuram,இந்தியா
26 ஆக, 2019 - 09:40 Report Abuse
Jagadeesan R சீமான் கிட்ட காசு இழந்து பைத்தியமாவே ஆகிட்டீங்களே மன்சூர் மக்கள் தலைவர பத்தி பேசி வயிறு வளர்க்கணும் அப்படினா உனக்கும் அவர்தான் படிஅளக்குறார்
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in