Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குற்றாலீஸ்வரனை சந்தித்த அஜித்

24 ஆக, 2019 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Ajith---Kutraleeswaran-Met

சென்னை: பிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் அஜித். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

வெற்றியோ தோல்வியோ எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், தன் குறிக்கோளின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று கொண்டே இருப்பவர் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மாத இறுதியில் அஜித்தின் அடுத்த பட ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்குகிறார். சமீபகாலமாக பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் நடித்து வந்த அஜித், இப்படத்தில் கருமையான முடியுடன், இளமையான தோற்றத்தில் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை நிரூபிப்பது போல, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் அஜித் அப்படித்தான் தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல நீச்சல் வீரரான குற்றாலீஸ்வரனை அஜித் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு எங்கே, எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால், நீச்சலில் உலக அளவில் பல விருதுகளை வென்றவரும், கின்னஸ் சாதனை புரிந்தவருமான குற்றாலீஸ்வரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் எதிர்கால லட்சியம் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் தொடங்குவது தான். எனவே, அது தொடர்பாக குற்றாலீஸ்வரனை அவர் சந்தித்திருக்கலாம் எனத் தெரிகிறது. குற்றாலீஸ்வரனின் பதிவும் அதையே கூறுகிறது.

இந்த சந்திப்பின் போது, அஜித் தான் குற்றாலீஸ்வரனின் ரசிகர் என்று கூறினாராம். அவரின் எளிமை தன்னை சாய்த்துவிட்டதாக குற்றாலீஸ்வரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மெலிந்த தோற்றத்தில், பயங்கர ஸ்டைலீஷாக அஜித் இருக்கும் இந்தப் போட்டோ சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அமேசான் தீயை அணைக்க பிரார்த்திப்போம்: விவேக்அமேசான் தீயை அணைக்க ... நான் பாக்கியசாலி: சுஜா வருணி நெகிழ்ச்சி நான் பாக்கியசாலி: சுஜா வருணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

LAX - Trichy,இந்தியா
25 ஆக, 2019 - 11:46 Report Abuse
LAX இருவருக்கும் வாழ்த்துக்கள்.. Superb..
Rate this:
25 ஆக, 2019 - 10:51 Report Abuse
mannandhai kutraaleesearan is one among the few who met JJ in Apollo Hospital during her last days and assured the public on her health conditions.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
25 ஆக, 2019 - 03:53 Report Abuse
BoochiMarunthu இவரை அரசியலில் தள்ள பிஜேபி ஏன் முயற்சி செய்யவில்லை ? வருமான வரி துறையை முடுக்கவில்லையா ? ரசினியும் கொஞ்சம் நிம்மதியா இருப்பார் இல்ல ?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 ஆக, 2019 - 09:18Report Abuse
Sanny என்னப்பா பூச்சி, உனது மருந்து வியாபாரம் படுத்துவிட்டதா? கம்முனு குப்புற படுப்பா,...
Rate this:
agni - chennai,இந்தியா
24 ஆக, 2019 - 17:06 Report Abuse
agni நல்லது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in