Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட தர்பார் பாடல்: சந்தோஷ் சிவன்

24 ஆக, 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Darbar:-A-song-made-in-single-shot

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் படம் தர்பார். ரஜினி ஜோடியாக நடிகை நயன் தாரா நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். பாண்டியன் படத்துக்குப் பின், ரஜினி, போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் இது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஏப்ரல் 4ல் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. மும்பையில் மட்டும் இரு கட்டங்களாக படிபிடிப்பை, படக்குழு நடத்தி முடித்திருக்கிறது. படம் குறித்த எந்தத் தகவலும் வெளியே போகக் கூடாது என்பதில், தயாரிப்புக் குழு உறுதியாக இருக்கிறது. அதனால், படம் குறித்த எந்தத் தகவலானாலும், படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வெளியிடுகின்றனர்.

படத்தின் மூன்றாம் கட்டப் படபிடிப்பு தற்போது, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் விறுவிறுவென நடந்து வருகிறது. அங்கே, ரஜினியும்; நயன்தாராவும் இணைந்து பாடும் பாடல் வேகமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: தர்பார் படத்தில் நடிகர் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து ஒரு பாடல் ஜெய்ப்பூரில் பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மொத்த பாடலையும் ரீ-டேக் எடுக்காமல், ஒரே டேக்கில் எடுத்து முடித்திருக்கிறோம். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படத்திற்கு அந்தப் பாடல் ஒரு சிறப்பு. இந்த பாடலுக்கு நடன நிபுணர் பிருந்தா, மிகச் சிறப்பாக நடன அசைவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதனாலும், இந்தப் பாடல் பிரபலம் அடையும் என தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மஹத்தின் ‛இவன் தான் உத்தமன்'மஹத்தின் ‛இவன் தான் உத்தமன்' படபிடிப்பு நடக்கும்போதே விற்பனை: காக்கி படக் குழு மகிழ்ச்சி படபிடிப்பு நடக்கும்போதே விற்பனை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in