சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இது தொடர்பாக நடந்த சண்டையில் இந்தியாவுக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய பிறகு அந்நாட்டு ராணுவத்தினரிடம் சிக்கினார் நமது விமானப்படை வீரர் அபிநந்தன், உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் தயாராகிது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இதனை ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறார். அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இதுகுறித்து விவேக் ஓபராய் கூறியிருப்பதாவது: நமது வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு சொல்ல வேண்டியது நம் கடமை. அப்போது தான் வருங்கால தலைமுறை தேசப்பற்றுடன் வளரும். அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்கள் செய்த சாகசம் இந்தப் படத்தில் இடம்பெறும். பாலகோட் தாக்குதல் எப்படி நடந்தது. நம் ராணுவம் எப்படி திட்டமிட்டது. என்பது குறித்து படம் விரிவாக சொல்லும், இதற்கான அனுமதிகளை முறையாக பெற்றிருக்கிறேன். விரைவில் படம் பற்றிய முழு செய்திகளும் வெளியிடப்படும் என்றார்.