Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்போதும் முரட்டு சிங்கிள்தான்: பிரேம்ஜி

23 ஆக, 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
I-am-always-Morattu-Single-says-Premji-Amaran

நான் எப்போதுமே முரட்டு சிங்கிள்தான் என நடிகர் பிரேம்ஜி கூறியிருக்கிறார். இதையடுத்து, அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வந்த தகவலுக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி, சென்னை 28, மங்காத்தா, சரோஜா, கோவா உள்ளிட்ட பல படங்களி நடித்தவர். அவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் பார்ட்டி, ஜோம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

நாற்பது வயதாகும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என பல முறை தெரிவித்தும், யாரும் அதை நம்புவதாக இல்லை.

சமீபத்தில், திருமணம் போன்ற படத்தையும், கேக் ஓவர் என்ற வாசகத்தையும் உள்ளடக்கிய டி-ஷர்ட் ஒன்றைப் போட்டபடி, அவர் முகநூல் பக்கத்தில் படம் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தைப் பார்த்த அனைவரும், தனக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போகும் விஷயத்தைத்தான், நடிகர் பிரேம்ஜி, மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாக எடுத்துக் கொண்டு, பிரேம்ஜிக்கு தொடர்ந்து வாழ்த்துச் சொல்லி வந்தனர்.

இது நடிகர் பிரேம்ஜிக்கு பெரும் இம்சையாக இருந்திருக்கிறது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து, பிரேம்ஜி முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், முரட்டு சிங்கிள் என்ற எழுத்துடன் கூடிய பனியன் போட்டபடி எடுக்கப்பட்ட தன்னுடைய படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து, நடிகர் பிரேம்ஜி கூறியிருப்பதாவது: கேம் ஓவர் என்ற டி-ஷர்ட் அணிந்து முகநூல் மூலம் ஒரு பதிவிட்டேன். உடனே, எனக்கு திருமணம் நடக்கப் போகிறது என தன்னிச்சையாக முடிவுக்கு வந்த பலரும், எனக்கு போன் செய்து வாழ்த்துச் சொன்னார்கள். சிலர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் யாரென்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இனியும், இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது நல்லது இல்லை என்று முடிவெடுத்துத்தான், முரட்டு சிங்கிள் என்ற டி-ஷர்ட் போட்டு வந்திருக்கிறேன். நான் எப்போதுமே முரட்டு சிங்கிள்தான்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்கா உடனான வதந்தி: பிரபாஸ் எடுத்த முடிவுஅனுஷ்கா உடனான வதந்தி: பிரபாஸ் எடுத்த ... சாண்டி வீட்டில் அபிராமி சாண்டி வீட்டில் அபிராமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in