Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி? - மஞ்சுவாரியர் பேட்டி

23 ஆக, 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Manju-Warrier-says-how-they-stuck-in-himachal-landslide

நடிகை மஞ்சு வாரியார் தற்போது மலையாளத்தில் ‛கயற்றம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை சனல்குமார் சசிதரன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக மஞ்சுவாரியர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட படக்குழுவினர் இமாச்சல் பிரதேசம் சென்றனர். அங்குள்ள சத்ரு என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தினர்.

படப்பிடிப்பு நடக்கும்போது அங்கு திடீரென பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து பெரும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மஞ்சுவை காப்பாற்றுங்கள் என்று அவரது முன்னாள் கணவர் நடிகர் திலீப் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இதை அறிந்த ராணுவத்தினர் அந்த இடத்திற்கு சென்று பனி மலை வழியாக அவர்களை அழைத்து வந்து சேர்த்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம் திரும்பியுள்ள மஞ்சு வாரியர் கூறியிருப்பதாவது:

நாங்கள் 3 வாரத்துக்கு முன்பு இமாச்சலின் மணாலிக்கு சென்றோம். இங்கிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்துக்கு சென்றோம். அங்கிருந்து 7 கிலோ மீட்டர் நடந்து சென்று ஷியாம்கோரு என்ற இடத்துக்கு சென்றோம். அங்கு மிகவும் சிரமப்பட்டு தான் சென்றோம். எங்கள் யாருக்கும் மலையேற தெரியாது என்பதால் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த பகுதிக்கு சென்றோம்.

நாங்கள் செல்லும்போது அங்கு நல்ல கால நிலை இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கால நிலை மாறலாம். நிலச்சரிவு, பனிப்பொழிவு திடீரென ஏற்படும் என்று உள்ளூர்வாசிகள் எங்களை எச்சரித்தனர். அவர்கள் கூறியதுபோல நடந்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென காலநிலை மாறியது. மழை பெய்ததால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. பனிப்பொழிவும் அதிகரித்தது. ஷியாம்கோரு பள்ளத்தாக்கான பகுதியாகும். அங்கு குடில் கட்டி தான் அனைவரும் தங்கி இருந்தோம். அங்கு இருப்பது ஆபத்து என உள்ளூர்வாசிகள் கூறியதால் நாங்கள் மீண்டும் சத்ருவுக்கு நடந்து சென்றோம்.

செல்லும் போதே தூரத்தில் நிலம் சரிந்து விழுந்ததை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். மேலும் 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவும் இருந்தது. மிகவும் சிரமப்பட்டு நாங்கள் சத்ருவுக்கு வந்தடைந்தோம். அந்த பகுதியில் மின்வசதி இல்லை. ராணுவத்தினர் வந்து எங்களை பத்திரமாக மணாலிக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து திருவனந்தபுரம் வந்தோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபு புது சர்ச்சையோகிபாபு புது சர்ச்சை 100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா 100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in