Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்

23 ஆக, 2019 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Amazon-forest-fire:-Simran-angry-tweet

சென்னை: அமேசான் காடுகள் எரிவதைப் பற்றி வேதனையாக டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர், ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமந்தாவுக்கு சித்தியாக சீமராஜா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர, விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பூமியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை ... அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sridhar - Dar Es Salaam ,தான்சானியா
29 ஆக, 2019 - 15:20 Report Abuse
sridhar அங்கே அவர்கள் தீயை அணைப்பதற்காக எவ்வளவு பாடு படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது சும்மா பொழுது போகலைன்னு ஒரு ட்வீட் போட்ட தீ அணையாது அம்மணி பேசாம உங்க வேலைய பாருங்க
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
26 ஆக, 2019 - 18:27 Report Abuse
Bhagat Singh Dasan நீங்க இப்போ ட்வீட் பண்ணிடீங்க இல்ல, உலகமே இப்ப திரும்பி பாக்கும்
Rate this:
swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 15:04 Report Abuse
swega ஐயோ நான் அமேசான்ல online ஆர்டர் பண்ணியிருக்கேன். போச்சா அட, தீ காட்டுலயா
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24 ஆக, 2019 - 05:35 Report Abuse
Sanny அங்கே ஒரு சர்ச்சை கட்டியிருந்தால், எப்படியாவது தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும். அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள், வெறும் காட்டுவாசிகள் தானே என்று கவலை படவில்லை.
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23 ஆக, 2019 - 19:36 Report Abuse
Swaminathan Chandramouli அம்மணி நம் நாட்டில் வெள்ளம் கரைபுரண்டோடி மக்கள் இருக்க இடம் இல்லாமல் தெருவில் குடி இருக்கிறார்கள் இருக்க இடம் இல்லை , சாப்பிட உணவு இல்லை வீடுகளை இருந்த பாத்திரம் பண்டங்கள் போன இடம் தெரியவில்லை . நீங்கானம் சமூகத்துக்காக கவலை படுங்கள் அமேசான் காடுகள் எரிவதை அப்புறம் பார்க்கலாம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in