Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்

23 ஆக, 2019 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-Worlds-4th-Highest-Paid-Actor-on-Forbes-List

மும்பை: உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த, போர்ப்ஸ் பத்திரிகை, உலக அளவில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை நடிகர்கள் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், முன்னாள் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் என்கிற டுவைன் ஜான்சன் ரூ. 640 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

2ம் இடத்தில் தோர் படம் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ரூ. 547 கோடி வருமானத்துடன் உள்ளார். அயர்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ரூ. 473 கோடி வருமானத்துடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 466 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நடிகர் அக்ஷய் மட்டும் தான்.

பிரபல நடிகர் ஜாக்கி சான் ரூ. 415 கோடி வருமானத்துடன் இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய்குமார் ரஜினியின் வில்லனாக 2.0 படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. தற்போது அவர் நடித்துள்ள மிஷன் மங்கள் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,ப்ரியங்காவின் நாட்டுப்பற்று: ... ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in