Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்

23 ஆக, 2019 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Director-Ameer-angry-over-Biggboss-show

சென்னை: பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

கிட்டத்தட்ட 60 நாட்கள் ஆகிவிட்டது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து. தற்போது டாபிக் ஆப் தி டவுனே இந்த நிகழ்ச்சி தான். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரபலங்கள் பிக்பாஸ் பற்றிப் பேச தவறுவதே இல்லை. அந்தளவிற்கு அந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

16 போட்டியாளர்களுடன் ஆரம்பமாக இந்த நிகழ்ச்சியில் 17வது போட்டியாளராக வைல்ட் கார்டு மூலம் கஸ்தூரி இணைந்தார். மக்களால் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, விருந்தினராக மீண்டும் வீட்டிற்குள் வந்து, தற்போது மீண்டும் ஒரு போட்டியாளரான கதை ஊரே அறியும். தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இம்முறை பிக்பாஸில் உள்ள போட்டியாளர்களில் மக்களுக்கு அதிக அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தந்தவர் இயக்குநர் சேரன். தேசிய விருதுகள் வாங்கிய இயக்குநருக்கு இதெல்லாம் தேவையா என்ற பேச்சு பரவலாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அவர் நடத்தப்படும் விதத்தைப் பார்த்து, தமிழ் சினிமாவில் உள்ள அவரது நண்பர்கள் அவ்வப்போது தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சரவணன் மற்றும் மீரா பிரச்சினையின் போது, ரமேஷ் கண்ணா, வசந்தபாலன் உள்ளிட்டோர் இது தொடர்பாக வெளிப்படையாகவே தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், “ஆட்டோகிராப் படத்தால் எனக்கு சேரன் மீது அதிக மரியாதை உள்ளது. அவர் தற்போது எனது குடும்ப நண்பரும் ஆவார். பிக்பாஸை பார்ப்பதில்லை ஆனால் சேரன் அவர்கள் இடம்பெறும் சில வீடியோக்கள் பார்த்தேன், அவரை அவமரியாதையாக நடத்துகிறார்கள்.

எனக்கு வரும் ஆத்திரத்தில் இப்போதே பிக்பாஸ் வீட்டை உடைத்து இயக்குநர் சேரனை அழைத்து வர வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. ஆனால் நான் அமைதி காக்கிறேன். எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தான்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி!பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி! அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
25 ஆக, 2019 - 07:53 Report Abuse
Thalaivar Rasigan சேரனுக்கு எவனும் பண உதவி செய்யவில்லை என்று அவரே சொல்லி இருக்கிறார் - பணம் சம்பாதிக்க போனால் அதை கெடுக்கவும் தயாராகி விடுகிறார்கள். பிக் பாஸ் உண்மை அல்ல - கன்டென்ட் முதலில் சொல்லித்தான் எடுக்கிறார்கள். நிலை நிறுத்தப்பட்ட காமெராக்கள் மட்டும்தான் உள்ளது என நினைப்பவன் அறிவு இழந்தவன் - உள்ளே கேமராமேன்களும் உள்ளனர்.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
24 ஆக, 2019 - 17:22 Report Abuse
Jayvee பிக் பாசில் கடைசி வரை இருக்கும் நபர்கள் காங்கிரஸில் சேரலாம். அந்த அளவிற்கு சூடு சுரணை அற்று, க்ரோதம், வன்மம், காமம் எல்லாம் சேர்ந்து இருக்கும்.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
24 ஆக, 2019 - 17:21 Report Abuse
Jayvee அந்தாளு பணத்துக்கு ஆசைப்பட்டு போனாரு.. அமீர் தான் ஒரு பருப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் . கதவை உடைப்பதிற்கு முன், கமல் வாயை உடைக்க வேண்டும்.. செய்வாரா
Rate this:
kumzi - trichy,இந்தியா
24 ஆக, 2019 - 10:36 Report Abuse
kumzi பேசாம குண்டு ஒன்னு வச்சி விடு அமீர் பாய்
Rate this:
Manithan - Tamilnadu,இந்தியா
24 ஆக, 2019 - 08:30 Report Abuse
Manithan டாபிக் ஆப் தி டவுன்ல்லாம் இல்லை.... ஊடகங்கள் அப்படி ஆக்க முயற்சிக்குறீர்கள்.. விளங்கும் நாடு
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in