Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ்

23 ஆக, 2019 - 07:02 IST
எழுத்தின் அளவு:
மெகா-பட்ஜெட்-படங்கள்-இனி-வேண்டாம்:-பிரபாஸ்

பாகுபலியை அடுத்து, பிரபாஸ் நடித்த, சாஹோ படம், 30ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து அவருடன் பேசியதிலிருந்து:



சாஹோ பிரமாண்டமாக உருவானது எப்படி?


பாகுபலிக்கு பின், காதல் கதையில் நடிக்கவே விரும்பினேன். பாகுபலிக்கு முன், இயக்குனர், சாஹோ படத்தின் கதையை என்னிடம் கூறினார். இந்தளவு பெரிய படமாக, மும்மொழிகளில், சாஹோ உருவாகும் என, நினைக்கவில்லை. திட்டமிட்டு, எதையும் நடத்த வேண்டும் என, விரும்பவில்லை. கதைக்கு ஏற்றபடி, அனைத்துமே அமைந்து விட்டது. 100 - 150 கோடி ரூபாய் செலவில், படம் எடுக்கலாம் என, நினைத்தோம். ஆனால், சாஹோ படத்தின் பட்ஜெட், அதையும் கடந்து விட்டது.


பாகுபலி இந்தளவு வெற்றி பெறும் என நினைத்தீர்களா?


நிச்சயமாக இல்லை. பாகுபலி பெரிய வெற்றி என்பதை விட, அது, ஒரு வரலாற்று வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.


நேரடி தமிழ் படத்தில் எப்போது நடிப்பீர்கள்?


ஆரம்பத்தில் இருந்தே, தமிழில் நடிக்க, ரொம்ப விரும்பினேன். விரைவில், தமிழ் படத்தில் நடிப்பேன்.


சாஹோ இயக்குனரை பற்றி கூறுங்கள்?


சுஜித், மிகவும் இளமையானவர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சாஹோ படத்தில், அவர் தான் ஆக் ஷனில் கலக்கியுள்ளார்.


பாகுபலி, சாஹோ இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை?


இரண்டு படத்திலும், ஆக் ஷனில் மட்டுமே ஒற்றுமை இருக்கும். மற்றபடி இரண்டு படமும் வித்தியாசமானது; வெவ்வேறு தளத்தை கொண்டது.




சாஹோ என்றால் என்ன?


சமஸ்கிருதத்தில், ஜெய்ஹோ என்றும், தமிழில், வெற்றி நமதே என்றும், பொருள்படும்.


தொடர்ந்து மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பீர்களா?


போதும் சார்... வேண்டாம். நீண்ட கால தயாரிப்பில், மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கும் போது, நமக்கும் டென்ஷன் தான். இந்த காலத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து விடலாம். உடன் நடித்த ஷ்ரத்தா கபூரும், ஓராண்டுக்கு மேல், சாஹோ படத்திலேயே இணைந்திருக்க வேண்டி இருந்தது.


சாஹோ படத்தில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?


போலீசாக நடிக்கிறேன். ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும்.


ஹிந்தி மற்றும் தமிழில், டப்பிங் பேசினீர்களா?


ஹிந்தியில் எழுதி, பேசுவேன். ஆனால், வீட்டில், ஹிந்தி பேசுவது கிடையாது. படத்தின், டப்பிங்கையும், நானே பேசியுள்ளேன். ஹிந்தி பேசுவதில், ஷ்ரத்தா உதவியாக இருந்தார். தமிழில், நான் டப்பிங் பேசவில்லை. அடுத்த முறை நிச்சயம் தமிழில் பேசுவேன்.


பாகுபலி போல் சாஹோவும் வெற்றி பெறுமா?


வசூலில், அந்தளவு வெற்றி கிடைக்குமா எனத் தெரியாது. பாகுபலி பார்த்த ரசிகர்களின் மனதை வென்றால் போதும்.


ஒரு சண்டைக்காட்சிக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தீர்களாமே?


ரயில் சண்டைக் காட்சிக்காக, 80 கோடி ரூபாய் செலவு செய்தனர். படத்தின் முக்கியமான அந்த காட்சிக்கு, மிகவும் தேவையாக இருந்தது. அந்த காட்சி, படத்தில், 12 நிமிடங்கள் இடம் பெறும்.


தமிழில், மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பீர்களா? யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை?


பாகுபலியும், மல்டி ஸ்டார் படம் தான். கதை அமைந்தால், நிச்சயம் நடிப்பேன். மணிரத்னம் ரொம்ப பிடிக்கும்.


உங்களைப் பற்றி, திருமண வதந்தி நிறைய வருகிறதே?


எனக்கு, காதல் திருமணமாக இருக்கலாம். ஆனால், இப்போதைக்கு இல்லை, எப்போது நடக்குமோ, அப்போது நிச்சயம் நடக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குத்தாட்டம்... கொண்டாட்டம்... - விஜயலட்சுமி ஆவல்குத்தாட்டம்... கொண்டாட்டம்... - ... நேர்கொண்ட பார்வை - அபிராமி நேர்கொண்ட பார்வை - அபிராமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in