Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் டிவி பொய் புகார்; கமல் தலையிடணும்: பிக்பாஸ் மதுமிதா

22 ஆக, 2019 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Fake-complaint-against-me-says-Biggboss-Madhumita

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்க ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. இதுதொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் தனக்கு பேசிய சம்பளத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி சார்பாக சென்னை, கிண்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இது பொய்யான புகார் என மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். நான் யார் மீதும் புகார் கொடுத்தது கிடையாது. என் மீதும் புகார் வராத அளவுக்கு தான் இருந்து வருகிறேன். எனக்கு பேசப்பட்ட சம்பளத்தை கேட்டேன். பில் அனுப்ப சொன்னார்கள், நானும் அனுப்பி வைத்தேன். அவர்களும் தருவதாக சொல்லியிருந்தார்கள். வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் விஜய் டிவி நிர்வாகம் எதற்காக என் மீது பொய் புகார் கொடுத்தது என தெரியவில்லை. விஜய் டிவியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் கமலும், விஜய் டிவியும் தான் பேசி, ஒரு சுமூகமான முடிவை எடுக்க வேண்டும். நான் ஏன் வெளியேறினேன் என்பதற்கான காட்சியை ஒளிப்பரப்பாதது வருத்தமே. நான் போட்ட ஒப்பந்தப்படி மேற்கொண்டு இதுப்பற்றி என்னால் பேச முடியாது. டிவி சார்பாக ஒரு பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது விரிவாக எல்லாவற்றுக்கும் பதில் தருகிறேன்.

இவ்வாறு மதுமிதா கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிசில் நடித்தது ஏன்? அக்ஷரா ஹாசன்வெப் சீரிசில் நடித்தது ஏன்? அக்ஷரா ... விக்ரம் மருமகனும் சினிமாவில்... விக்ரம் மருமகனும் சினிமாவில்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

THANGARAJ - CHENNAI,இந்தியா
29 ஆக, 2019 - 07:24 Report Abuse
THANGARAJ திரு கமல் அவர்களும் விஜய் டிவி யில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக தானே நடந்து கொண்டு இருக்கிறார், அவரிடம் எப்படி நீங்கள் நீதி மையம் கொண்டுள்ளது என எதிர் பார்க்க முடியும். விஜய் டிவி தங்களின் தற்காப்புக்கு தான் புகார் கொடுத்து உள்ளார்கள். ஒரு வேலை, உங்களுக்கு பணம் அதிகமாக கொடுத்தால் நீங்களும் அமைதி காத்து போய்விடுவீர்கள்......
Rate this:
swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 15:09 Report Abuse
swega தொக்கா மாட்டிருக்கானுக. மொத்தமா புடிச்சி உள்ள போடணும். செய்வீர்களா செய்வீர்களா
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2019 - 19:31 Report Abuse
LAX State to State என்ன பிரச்சனை வந்தாலும்.. அண்டை மாநிலத்தவர் பாதுகாப்புக்கு உறுதியளிப்பதில் முன்னிலை வகிப்பது தமிழகமே.. இது தெரியாதமாதிரியே.. விளக்க வியாக்கியானம் வேற.. த்தூ..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23 ஆக, 2019 - 13:12 Report Abuse
Mirthika Sathiamoorthi மதுமிதாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் பல விஷயங்கள் முரணாக படுகிறது...1. ஸ்டார் நிறுவனம் மிகப்பெரிய மீடியா கார்ப்பரேட் கம்பெனி...இதன் பங்குதாரர்கள் மிகப்பெரிய ஆளுமை உடையவர்கள்... விளம்பரங்கள் மூலம் ஒரு நாளைக்கு மட்டும் இதனை கோடிகள் வருமானம் வருகிறது..இந்த பிக் பாசில் ஒவொருவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் சேர்த்தாலே பல கோடிகள். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலகோடிகள் லாபம்...இப்படி கோடிகளில் புரளும் கம்பெனிக்கு எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்கள் சட்ட ஆலோசனை வழங்குவார்கள்...இவர்கள் எதற்கு மதுமிதா எனும் ஒரு சிறு நடிகையின் மீது பொய் புகார் வழங்க வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? 2. இன்வாய்ஸ் தந்தாயிற்று எனக்கூறும் மது....invoce ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் ஒருவர் வேலை முடிந்ததும் வேலைக்கான கூலியகுறிப்பிட்டு கொடுக்கும் கணக்கே invoice....கொடுக்க பட்ட தேதியிலிருந்து 30 நாளுக்குள்ளோ, 60 நாளுக்குள்ளோ பணம் கொடுத்தால் போதும் .( பெரும் தொகை உடனே கொடுக்க அவசியம் இல்லை...வேலையின் தரம் சரிபார்க்கப்பட்டு கழிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் கழித்து பின் கொடுக்கப்படும் ) டிவி நிர்வாகம் பணம் கொடுக்க மாட்டேன் என கூறவில்லை..பதிலுக்கு மதுவின் மீது போடப்பட்ட வழக்கு அவர் கூலியை உடனே கொடுக்க சொல்லி மிரட்டுவதாக...அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஒருவர் வழக்கு பதிய முடியாது...மது தரப்பு ஏதோ செய்திருக்க வேண்டும்...3. டிவி நிர்வாகத்துடன் மதுவால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை....புகார் கொடுத்தபின் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்திப்பது பேசுவது சட்டப்படி தவறு...அதனால் டிவி மதுவுடன் பேசுவதை தவிர்க்கிறது...4., கமல் தலையிட வேண்டும்...கமலை கேட்ட பிக் பாசுக்குள் போனீங்க கமலை கேட்ட கையை அறுத்துக்கிட்டிங்க? இப்பாவந்து கமல் பஞ்சாயத்து பண்ணனும்...அவரென்ன பஞ்சாயத்து போர்ட் ப்ரசிடெண்டா? அவரும் உங்களைமாதிரிதான்...அவரை நீக்கும் அதிகாரம் டிவி நிர்வாகத்துக்கு உண்டு....அப்புறம் யார் அவருக்கு பஞ்சாயத்து பண்றது..? 5. ஒப்பந்த அடிப்படையில் நடக்கிறேன்... ஒப்பந்தத்தி மீறி கையை அறுத்துகிட்டு இப்போ ஒப்பந்த அடிப்படையில் நடக்கிறேன்னா? அப்போ டேனியல் உளறல்? போங்கம்மா காமெடி பண்ணிக்கிட்டு...தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம் இதுக்கே உங்கள்பிடிச்சு உள்ள வைக்கணும் ...6.அந்த காட்சியை ஒளிபரப்ப வில்லை...எப்படி ஒளிபரப்புவாங்க? நீ பாட்டுக்கு காவேரி அது இதுன்னு சென்சேஷனலா பேசிட்டே...ஒளிபரப்பாம இருக்கறப்பவே பல தமிழ் தேசிய இயக்கங்கள் பாய தயாரா இருக்கு டிவி நிர்வகித்து மேல...இதுல பரப்பியிருந்த உள்ளே இருக்கும் கன்னட பெண்ணின் பாதுகாப்பு? மதுவுக்கு எதிரா பேசியவங்க அனைத்தும் காவேரிக்கு எதிரியாய் மாறியிருப்பங்களே...அப்புறம் தமிழ் தேசியம் பேசும் இயக்கம் பிக்பாங்ஸ் வீட்டை முற்றுகை இட்டால் என்னவாகும்? அவர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு விஜய் டிவி தானே பொறுப்பு... இந்த வீடியோவை வெளியிட்டு விஜய் டிவி நாசமா போகணுமா? பாதுகாப்பு உறுதிப்பட்டால் வீடியோ வர வாய்ப்பு இருக்கு... கருத்து சொல்வது அனைவரின் உரிமை அதே சமயம் அடுத்தவரின் மனநிலை பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் கருத்து சொல்வது கருத்துசுதந்திரம் அல்ல..கருத்து கொலை ... அடுத்து பிக் பாஸ்..இது ஒரு விளையாட்டு...இதை விளையாட பாக்காம மக்கள் இதை உணர்வு ரீதியா அணுகுவதே விஜய் டிவி க்கு மாபெரும் வெற்றி...இதைவிளையாட்டா பாக்க ஆரம்பிச்சோம் அடுத்த நிமிஷம் பிக் பாஷை மூடிடவேண்டியதுதான்...ஆனா நாம பாக்கமாட்டோம்... விஜய் டிவி அப்படி பண்ண விடாது கவலை வேண்டாம்.....சிலர் கேக்கலாம் ஓட்டு போட்டு வெளியை அனுப்பின வனிதா எப்படி உள்ளவரலாம்? கமல் பதில்சொல்லணும்ன்னு கேக்கலாம்... ஒரு கட்சி சார்பாஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த MLA ராஜினாமா பண்ணும்போது, ஒட்டு போட்டது சேவை செய்ய நீ எப்புடி உன் சுயலாபத்துக்கு ராஜினாமா செய்யலாம் வேறகட்சிக்கு போலாம் இத கேட்டோமா?ஆனா பிக் பாஷை கேப்போம்... ஏன் இது எல்லோராலும் பாக்க படுது? ஒரு பிடிக்காத இடத்தில, பிடிக்காத ஆளுங்களுடன் வேலைசெய்யும் போது ஒரு மனா அழுத்தம் இருக்கும்..அதுதான் பிக் பாஸ்...அதே தவிப்பில் இருக்கும் நம்மில் பலர்..அவங்க இருவரும் சேருவது பிக் பாஸுக்கு பணம்...முன்னே சொன்னேன் இதை யாரும் விளையாட்டை பாக்களை...பாத்தா பிக் பாஸ் பெயில்...பாக்கலைன்னா பிக் பாஸுக்கு காசு..திரும்ப திரும்ப பிக் பாஷை குறை சொல்லுபவர்களுக்கு, எல்ல சேனலையும் கணக்கில எடுத்துக்கிட்டா கிட்டத்தட்ட 70 சீரியல்கள் ஒரு நாளைக்கு ஒளிபரபாகுது எல்லாத்தையும் நாம உக்காந்து பாக்குறோம்.? பலவற்றை புரந்தள்ளிவிடுகிறோம்...அதுமாதிரி பிக் பாஷையும் புறந்தள்ளுவதை விட்டுவிட்டு திரும்ப திரும்ப பிக் பாஸ் இது பண்ணுது அது பண்ணுதுன்னா? பாக்கறவன் இருக்கவரைக்கும் ஒளிபரப்பும் இருக்கும்....அதை தடுக்கவே முடியாது...பாக்கறவனுக்கு இல்லாத வெக்கம், காசுக்காக ஒளிபரறவனுக்கு எதுக்கு இருக்கணும்?
Rate this:
23 ஆக, 2019 - 07:47 Report Abuse
karavaraya jankriku Alva kudutangala
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in